அங்குசம் பார்வையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

தயாரிப்பு: ’சந்திரா ஆர்ட்ஸ்’ எஸ்.இசக்கிதுரை. டைரக்‌ஷன்: வெங்கட கிருஷ்ண ரோகாந்த். நடிகர்—நடிகைகள்: ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், தபியா மதுரா, கனிஹா, மகிழ் திருமேனி, மோகன்ராஜா, கரு.பழனியப்பன், ‘சின்னக் கலைவாணர்’விவேக், ரித்விகா, இமான் அண்ணாச்சி, ஸ்ரீரஞ்சனி, ராஜேஷ், சின்னி ஜெயந்த், பவா செல்லதுரை, வித்யா பிரதீப். இசை: நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன், எடிட்டிங்: ஜான் ஆபிரகாம். தமிழக ரிலீஸ்: சக்தி பிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன். பி.ஆர்.ஓ.நிகில் முருகன்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

படத்தின் டைட்டில் கார்டு ஆரம்பிக்கும் போதே பிலிம் டிசைனில் போர்க்காட்சியும் கதையின் நாயகன் ’மக்கள் செல்வன், விஜய்சேதுபதியின் பின்னணிக் குரலும் ஆரம்பிக்கிறது. ”என்னோட சின்ன வயசுலேயே ஏன் மனுசங்களுக்குள்ள சண்டை நடக்குது, நாடுகளுக்கிடையே போர் நடக்குதுன்னு கேட்பேன். இந்த சண்டை, போர் எல்லாமே நிலத்துக்காகத்தான்னு பெரியவர்கள் சொல்வார்கள். அந்த நிலம் யாருக்காகன்னு கேட்பேன். மக்கள் நிம்மதியா வாழ்றதுக்காகன்ணு சொல்வார்கள். மக்கள் நிம்மதியா வாழணும்னா ஏன் சண்டை போடுகிறார்கள்னு திருப்பிக் கேட்பேன். இப்படியெல்லாம் கேட்குற என்னோட பேரு….”

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

கட் பண்ணா இலங்கை—கண்டி  புறவழிச்சாலை. முற்றிலும் தலை சிதைக்கப்பட்ட புத்தரின் பிரம்மாண்ட சிலை. அப்பவே நமக்கு புரிஞ்சு போச்சு, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் பாடம் பயின்ற மாணவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்,  ’வெயிட்டா’ இறங்கி அடிக்கப் போறாருன்னு.

படத்தின் இடைவேளைக்குச் சற்று முன்பு வரை, தமிழீழம், தமிழ்நாட்டின் கொடைக்கானல் , திண்டுக்கல், ஊத்துப்பட்டி அகதிகள் முகாம், போன்ற இடங்களில் கதையைப் பயணிக்க வைத்து, ‘இடைவேளை’ போடும் போது, ரசிகனின் மனசுக்குள் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார் டைரக்டர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் சினிமாக்களில் இது தான் மிகச்சிறந்த படம். மேகா ஆகாஷிடமும் தபியா மதுராவிடமும் விவேக்கிடமும் தான் யார் என்ற நிஜத்தைச் சொல்லும் சீனிலும் ஈழத்தமிழர் ஆறுமுகமாக வரும் கரு.பழனியப்பனிடம் நன்றியுணர்வுடன் கண்ணீர்விட்டுக் கலங்கும் சீனிலும் மனுசன் பின்னிட்டாரு போங்க. அதிலும் குறிப்பாக க்ளைமாக்சில் “இப்ப நான் எந்த நாட்டுக்குடிமகனும் இல்ல. ஆனா உலகக்குடிமகனா ஒண்ணு சொல்ல ஆசைப்படுறேன்” என்றபடி பேச்சைத் தொடர்ந்து கொண்டே உணர்வுகளை வெளிப்படுத்தும் சீன் மாஸ் & க்ளாஸ்.

 

‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் க்ளைமாக்சில் மாமேதை சார்லி சாப்ளின் பேசுவாரே.. அதற்கு இணையானது தான் இந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ க்ளைமாக்சில் விஜய்சேதுபதி பேசுவது.

படத்தில் நடித்த எல்லோருக்குமே சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா மிகப்பெரும் சிறப்பு செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன், எடிட்டர் ஜான் ஆபிரகாம், புதையுண்ட சர்ச் செட் போட்ட ஆர்ட் டைரக்டர் வீரசமர் ஆகியோரின் உழைப்பும் சிறப்பானதே.

பாராட்டப்பட வேண்டிய இரண்டு முக்கிய நபர்கள் தயாரிப்பாளர் இசக்கிதுரையும் படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் பண்ணிய சக்திவேலனும் தான்.

படத்தின் தலைப்பிற்கு 100% நியாயம் சேர்த்து, உண்மையை நேர்மைத்திறத்துடனும் அறத்துடனும் அகிலத்திற்கு சேதி சொன்ன இந்தப் படைப்பையும் இதைப் படைத்த தமிழன் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அனைவரும் காணீர், அவசியம் காணீர்.

  -மதுரைமாறன்  

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.