யாஷ்-ன் ‘டாக்ஸிக்’ஹாலிவுட் அதிரடி இயக்குநர் பெருமிதம்!
ஹாலிவுட் பிளாக் பஸ்டர் படங்களில் அதிரடியான ஆக்சன் காட்சிகளை வடிவமைப்பதில் புகழ்பெற்றவர் இயக்குநர் ஜே ஜே பெர்ரி. இவர் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’ படக் குழுவினருடன் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் #யாஷுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘இவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.
மேலும் அந்தப் பதிவில் ”#டாக்ஸிக் என பெயரிட்டு, தனது நண்பர் யாஷ் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் சிறப்பான வெற்றியை பெற்றேன். ஐரோப்பா முழுவதிலும் இருந்து என் அன்பான நண்பர்கள் பலருடன் பணியாற்ற முடிந்தது. இதை அனைவரும் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஒரு அற்புதமான அனுபவம். நாங்கள் இணைந்து பணியாற்றியதில் மிகவும் பெருமை கொள்கிறோம்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
பெர்ரியின் இந்தப் பெருமிதம் குறித்து”என் நண்பரே உங்களுடன் இணைந்து நேரடியாக பணிபுரியும் போது உங்களின் ஆற்றலை அறிந்தேன்” என்று யாஷும் பதிவிட்டிருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், பல சர்வதேச மொழிகளிலும் டப்பிங் செய்யப்படவுள்ள ‘டாக்ஸிக்’-ஐ கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.
— மதுரை மாறன்.