மார்ச் 27-ல் வருகிறார் ‘எம்புரான்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’   இந்த மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில், மலையாளம் , தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

'எம்புரான்'
‘எம்புரான்’

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மலையாள  சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன்,  பிருத்திவிராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், ஹாலிவுட் நடிகர் ‘Game of Thrones’  புகழ் ஜெரோம் ஃப்ளின்,  அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அனீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதன் படப்பிடிப்பு  இந்தியாவில் சென்னை, மும்பை , கேரளா, குஜராத் , இமாசலப் பிரதேசம் சிம்லா, காஷ்மீர் லே, ஆகிய இடங்கள் மற்றும் அமெரிக்கா,  ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளிலும் நடந்தது. அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள ‘எம்புரான்’ மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

தொழில்நுட்பக் குழு ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ், எடிட்டிங் : அகிலேஷ் மோகன், ஸ்டண்ட் டைரக்டர் : ஸ்டண்ட் சில்வா, கலை இயக்குநர்: நிர்மல் தேவ்  முதல் ,  இசை: தீபக் தேவ்.

 

—  மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.