”ஏழைகளை எழுத்துக்கூட்டிப் படிக்க வைத்தது சி.பா.ஆதித்தனாரின் இதழியல் நுண்ணரசியல்” பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் உரை! தொடா் 6

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாவரும் … கேளீர்… (தமிழியல் பொதுமேடை) தொடா்-6

அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தும் யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடையின் 6ஆம் நிகழ்வு செப்09 அன்று சி.பா.ஆதித்தனாரின் இதழியல் நுண்ணரசியல்” என்னும் பொருண்மையில் நடைபெற்றது.

அங்குசம் இதழ்..

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்தநாளை பெருமைபடுத்தும் விதமாக, நடைபெற்ற இவ் விழாவிற்குத்திருச்சி தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ் உதவிப்பேராசிரியர் ஜா.சலேத் தலைமை தாங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க் கல்வித்துறைப் பேரா சிரியர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் சிறப்புரையாற்றினார்.

பேராசிாியா் தெ.வெற்றிச்செல்வன்
பேராசிாியா் தெ.வெற்றிச்செல்வன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ் செழியன் அறிமுகம் செய்துவைத்து வரவேற்பு ரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு நிகழ்வின் புரவலர் முனைவர் ரெ.நல்லமுத்து பயனாடைகள் அணிவித்துச் சிறப்பு செய்தார்.

“சி.பா.ஆதித்தனார் ஏழை, எளிய மக்களைச் செய்தித்தாள்களைப் படிக்கவைத்தார். கிராமப் புறங்களில் உள்ள தேநீர் கடைகளிலும், முடி திருத்தங்களிலும் உள்ள தினத்தந்தியைப் படித்து மக்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொண்டனர்.

1967 தமிழ்நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் தினத்தந்தி உதவியாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். புரட்சிக்குத் தேவையான ஆயுதங்களாகக் காகிதங்களையே பயன்படுத்தினார்.” என்று தலைமை உரையில் பதிவு செய்தார் முனைவர் ஜா.சலேத்.

*இதழியலின் பண்டிதத் தமிழ்நடையை ஆதித்தனார் மதுரைக்குச் கிண்டல் செய்கிறார். மதுரைக்கு செல்கிறேன் என்றுதான் எழுதமுடியும். நான்மாடக்கூடலுக்கு நன்னினேன் என்று எழுதமுடியுமா? என்று கேள்வியை முன்வைக்கிறார்”

யாவரும் கேளீா்சிறப்புரையாற்றிய பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன்,” சி.பா.ஆதித்தனார் தன்னுடைய இளநிலை பட்டப்படிப்பைத் திருச்சியில் உள்ள தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில்தான் நிறைவு செய்தார். திருச்சிக்குப் பெருமை சேர்த்த சி.பா.ஆதித்தனாருக்குத் திருச்சியில் 120ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது சிட்டுக்குருவியின் தலையில் பட்டு முண்டாசு கட்டியிருப்பதுபோன்று சிறப்பாகவும் பெருமையாகவும் உள்ளது.

ஒரு சமயம் இந்தியாவின் புகழ்பெற்ற தமிழ்நாட்டில் தலைசிறந்த ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் போகிறார். அங்கிருந்த இதழை ஒரு குச்சியால் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். காரணம் அந்த இதழின் பெயர் ‘பறையன்’ என்பதாகும்.

இப்படிப்பட்ட இலட்ச ணம் கொண்ட தமிழ் சமூகத்தில் நுண்ணர சியல் பேசாமல் வேறு எப்படிப் பேசுவது? சி.பா.ஆதித்தனார் என்பவர் தமிழின் மாபெரும் ஆளுமை.அவர் நடத்திய தினத்தந்தி இதழில் பல தியதில் நுண்ணரசியல்களை வைத்துத்தான் செய்திகளை வெளியிட்டார். அந்த நுண்ணரசியல் என்பது தமிழ்ச் சமூகத்தின் அன்றைய தேவையாக இருந்தது.

சி.பா.ஆதித்தனார் செய்திகளை உயரிய நடையில் எழுதாமல் மக்களுக்குப் புரியம் மக்கள் மொழியில் செய்திகளை எழுதினார். இன்றியமையாத என்ற சொல்லை ஆதித்தனார் பார்த்துவிட்டு, இந்தச் சொல் மக்களுக்கு எளிமையாகப் புரியுமா? ரியு எளிமையான நடையில் எழுதுங்கள் என்று செய்தியாளர்களைக் கேட்டுக்கொள்வார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தமிழ் இதழியலில் நுண்ணரசியலைப் புகுத்தியவர் தந்தை பெரியார். அவர் 1930ஆம் ஆண்டு வாக்கில் இரஷ்யா செல்கிறார். திரும்பி வர ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். விடுதலை பத்திரிக்கைக்கு எப்படித் தலையங்கம் எழுதுவது என்று ஆசிரியர் குழு கவலைக்கொண்டது. அய்யா கொஞ்சம்கூடத் தாமதிக்காமல் ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு எழுதும் தலையங்கத்திற்கு எதிராக நீங்கள் தலையங்கம் எழுதினால் போதும்’ என்று கூறினார்.

‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்தவர் சி.பா.ஆதித்தனார். பொதுவுடமை இயக்கங்கள்’உலகத்தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள் என்ற ஒரு முழக்கத்தைமுன்வை அந்தமுழக்கத்திற்குச் சற்றும் குறையாமல் ஆதித்தனார், ‘உலகத்தமிழர்களே ஒன்றுசேருங்கள்’ என்றமுழக்கத்தை முன்வைத்தார்.

கல்கி இதழ், ஆதித்தனார் பகல் கனவு காண்கிறார் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்குப்பதில் சொல்லும் வகையில் “நான் காண விரும்பும் தமிழரசு பகல் கனவல்ல, என் தமிழரசு கனவும் நிறைவேறும். உங்களின் பார்த்திபன் கனவும் நிறைவேறும்’ என்று நயம்படத் தன் மறுப்பை எழுதுகிறார்.

யாவரும் கேளீா்இதழைத் தொடங்கும்போது நான் இந்த இதழின் முதலாளி அல்ல. நானும் ஒரு தொழிலாளிதா என்று சொல்லிக் கொள்கிறார். இதழியலின் பண்டிதத் தமிழ்நடையை ஆதித்தனார் கிண்டல் செய்கிறார். மதுரைக்குச் செல்கிறேன் என்றுதான் எழுதமுடியும். நான்மாடக்கூடலுக்கு நன்னினேன் என்று எழுதமுடியுமா? என்று கேள்வியை முன்வைக்கிறார்.

தமிழ்ப்பற்றாளர்கள் பிறமொழி சொற் களைத் தமிழ் படுத்துகிறோம் என்ற பெயரில் ஷேக்ஸ்பியரைச் செகப்பிரியர் என்று எழுதுவார்கள். தமிழ்ப்படுத்துகிறோம் என்ற பெயரில் தமிழைப் படாதபாடு படுத்திவிட்டார்கள். இதைப் புரிந்துகொண்ட ஆதித்தனார் மக்கள் மொழியில் செய்திகளை எழுதினார். எதற்குப் பெயர் வைத்தாலும் மக்களுக்குப் புரியும் எளிய மொழியில் அமைக்கவேண்டும் என்பதில் ஆதித்தனார் உறுதியாக இருந்துள்ளார்.

பண்டிதர் நேரு தினத்தந்தியை முன்னுதாரணமாக பேசியுள்ளார். இதழ் நடத்துவது என்பது ஒரு கடினமான பணியாகும். இதழ் நடத்தினால் சொத்துகளை இழக்கவேண்டி வரும் என்ற நிலையை மாற்றி அமைத்தவர் சி.பா. ஆதித்தனார். ‘வீ ஐரிஸ்’ என்னும் ஐரிஸ் நாட்டில் மொழியின் அடிப்படையில் தோன்றிய இயக்கத்தைப் பார்த்து ஆதித்தனார் நாம் தமிழர் என்னும் இயக்கத்தைத் தொடங்குகிறார்.

தினத்தந்தி நாளிதழில் செய்திகளை வகைப்படும் போது அன்றைய நிகழ்வுகள் அன்றைய செய்தியாக வேண்டும். அதில் தமிழ்நாட்டு செய்திகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். ஒரே நேரத்தில் இதழ்கள் போய்ச் சேரவேண்டும் என்ற 3 கோட்பாடுகளை இதழியலில் முன்வைத்தார்.

தன் மகன் சிவந்தி ஆதித்தனாரை அவர் இதழியல் துறையில் நுழைக்கும்போது, அச்சுக்கோர்ப்பவராக, பிழைதிருத்தம் செய்பவராக, பைண்டிங் செய்பவராக, இதழ்களைத் தொடர்வண்டி நிலையங்களுக்குக் கொ கொண்டு செல்பவராகவே வைத்திருந்தார். சொந்த மகன் என்பதற்காக ஆதித்தனார் எந்தச்சலுகையையும் காட்ட காட்டவில்லை.

அச்சுக்குத் தேவைப்படும் காகிதத்திற்குத் தட்டுப்பாடுகள் வந்தபோது, வைக்கோலைக் கொண்டு கையால் காகிதம் செய்திருக்கிறார். வெளிநாட்டில் வழக்கறிஞர் பட்டத்திற்குப் படித்து, சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த ஆதித்தனார், தன்னுடைய மேதமையை விட்டுவிட்டு, எளிய மக்களுக்காக இதழ் நடத்தினார்.

தமிழர்களை அறிவுவய அறிவுவயமாக்கியதில் ஆதித்தனார் இதழியல் வழி வைத்த நுண்ணரசியல்களும் அடிப்படையாகும். சி.பா.ஆதித்தனாரை காலம் உள்ளவரைக் கொண்டாடிக் கொண்டிருப்போம்” என்று உரையை நிறைவு செய்தார். விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு, அங்குசம் அறக்கட்டளையின் தலைவர் ஜெ.தாவீதுராஜ் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியின் புரவலர் முனைவர் ரெ.நல்லமுத்து நன்றி கூறினார் •

— ஆதவன்

 

யாவரும் கேளீா் தொடா் 5 ஐ படிக்க – லிங்க் 

”பெரியார் + அண்ணா = கலைஞர்” யாவரும்… கேளீர்… – தமிழியல் பொதுமேடை – 5

 

 

 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.