கீழடியில் தமிழர்களின் நகர நாகரிகம் – தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் துளசேந்திரன் பெருமிதம் ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 10

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்திவரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை -10 ஆம் நிகழ்வு 23.11.2024 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குத் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் எஸ்.மணிகண்டன் தலைமை தாங்கினார். ‘கீழடி நாகரிமும், தமிழர் வரலாறும்’ என்னும்  பொருண்மையில், பட விளக்கங்களோடு, தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை பேராசிரியர் முனைவர் துளசேந்திரன் சிறப்புரையாற்றினார். நிகழ்வை முனைவர் தி.நெடுஞ்செழியன் ஒருங்கிணைப்பு செய்தார். நிகழ்வின் புரவலர் முனைவர் ரெ.நல்லமுத்து சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் சிறப்பு விருது பெற்ற திருச்சி அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்களை வழங்கினார்.

நிகழ்வில் தலைமை உரையாற்றிய முனைவர் மணிகண்டன்,“ வரலாறு என்பது வெறும் தொகுப்பு அல்ல. வரலாறு என்பது அடுத்த தலைமுறைக்கான பண்பாட்டு பொக்கிஷம். இளைய தலைமுறைக்குச் சில செய்திகளைச் சொல்லியாக வேண்டிய தேவை உள்ளது. வரலாற்றை எழுதுவதற்கு அடிப்படையாக தொல்லியல் சான்றுகள் தேவையாக உள்ளன. தொல்லியல் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் இணையும்போதுதான் ஒரு வரலாறு என்பது முழுமையடைகின்றது. புதிய செய்திகள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. என்றாலும் தமிழர் வரலாறு 100 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. தற்போதைய தொல்லியல் ஆய்வுகள் தமிழர்களின் வரலாற்றை எழுதுவதற்கு உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை – 10
யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 10

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை பேராசிரியர் முனைவர் துளசேந்திரன் சிறப்புரையில்,“தமிழகத்தில் இதுவரையிலான தொல்லியல் ஆய்வுகள் தூத்துக்குடியிலுள்ள ஆதிச்சநல்லூர், ஈரோடு கொடுமணல், பரிக்குளம், திருத்தங்கல், மாங்குடி, மோதூர், கோவலன்பொட்டல், பூம்புகார், ஆனைமலை, பல்லவமேடு, தொண்டி, கொற்கை, வசவசமுத்திரம், திருக்கோவிலூர், பட்டரைபெரும்புதூர் மற்றும் பேரூர் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இதில் ஆதிச்சநல்லூர் ஆய்வே அதிமுக்கியத்துவம் பெற்று விளங்கியது. தற்போது அதற்கும் மேலாக கீழடி அகழாய்வுகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்கிறது. இத்தொல்லியல் களம் சுமார் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கும், கிமு 5 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது எனக்கணித்துள்ளனர். இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.

யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை – 10முதற்கட்டமாக, இந்தக் களம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக கணிக்கப்பட்டது. மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக இந்த அகழ்வாயில் இருந்து இரண்டு மாதிரிகள் கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டது. சூலை 2017 இல் வெளிவந்த இதன் முடிவுகள் இந்த மையம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னையது என்பதை உறுதிசெய்தன. நான்காம் கட்ட அகழ் வாய்வின் போது பெறப்பட்ட பொருட்களை கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்தபோது அதில் ஒரு கலைப்பொருள் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள், வணிகத் தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என்ற வகையிலானவை.

இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான “பெருமணலூர்” இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. “சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது”. நீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்களாகக் கருதப்படுவன. கீழடியில் “சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது.

யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை – 10ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அழகங்குளத்திலும் இத்தகைய பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியிலேயே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படுகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’ போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி ஆகியவையும் கிடைத்துள்ளன. இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள், மீன் சின்னம் வரையப்பட்ட மண்பானை ஓடு உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த அகழ்வாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகைக் கரை நாகரிகம் ஒரு சிறந்த தமிழர்களுக்கான நகர நாகரிகம் இருந்தமைக்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன” என்று சான்றுகளைக் காட்சிப்படுத்தி அவற்றை விளக்கி உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்வின் முழுமையான வீடியோ பார்க்க.

சிறப்பு விருந்தினர்களுக்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெ.டி.ஆர். நினைவு பரிசாக நூல்களையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.  பார்வையாளர்களின் தொல்லியல் சான்றுகள் குறித்த ஐயங்களுக்குப் பேராசிரியர் துளசேந்திரன் விளக்கங்கள் அளித்தார். நிறைவாக, புரவலர் முனைவர் ரெ.நல்லமுத்து நன்றியுரை நிகழ்த்திய பின்னர் நிகழ்வு நிறைவுற்றது.

               –   ஆதவன்.

 

யாவரும் கேளீர் -தமிழியல் பொதுமேடை – 9 ஐ படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக்

“அனைத்து இந்து பண்டிகைகளின் மூலம் பௌத்தமே” சான்றுகளை அடுக்கிய பேராசிரியர் சீமான் இளையராஜா ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 9

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.