அங்குசம் சேனலில் இணைய

“சமூக மேம்பாட்டு திட்டங்களில் மக்களின் பங்களிப்பு இருந்தால் திட்டம் வெற்றிபெறும்” – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஸ்கோப் நிறுவனர் பத்மஸ்ரீ சுப்புராமன் அனுப உரை !

அங்குசம் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து நடத்தி வரும் யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடையின் 28 – ஆம் நிகழ்வு,  23.08.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,  இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற மாராச்சி சுப்புராமன் “சுகாதாரமான வாழ்வை சுகமான வாழ்வு” என்னும் பொருண்மையில் தன் அனுபவங்களை  பகிர்ந்து கொண்டார். சிறப்புரையாற்றிய சுப்புராமன் அவர்களுக்கு நிகழ்வின் புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் நூல் வழங்கி சிறப்பு செய்தார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் நன்றி கூறினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் தொடக்க உரையில்,“ சமூக மேம்பாட்டிற்காக சமூக அமைப்பு மற்றும் மக்கள் கல்வி சங்கம் (SCOPE) என்னும் அமைப்பைத் தொடங்கி அதன் நிறுவனராக இருந்து உழைத்துக் கொண்டிருப்பவர் ஐயா சுப்புராமன் அவர்கள். அவர் கிராமங்களில் சுகாதார மேம்பாட்டிற்காக, தொடர்ந்து சமூகப் பணியில் அக்கறை செலுத்தியதைத் தொடர்ந்து இந்திய அரசு யாருடைய பரிந்துரையும் இல்லாமல் ஐயா அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. திருச்சிக்குப் பெருமை சேர்த்த பலருள் ஐயா சுப்புராமன் அவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறார். சுத்தம் சோறு போடும் என்ற பழமொழிக்கு ஏற்ப கிராமங்களில் சுகாதார மேம்பாட்டை மேம்பட செய்த பெருமைக்குரியவர்” என்று குறிப்பிட்டார்.

பத்மஸ்ரீ சுப்புராமன்
பத்மஸ்ரீ சுப்புராமன்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனை தொடர்ந்து, சிறப்புரையாற்றிய பத்மஸ்ரீ சுப்புராமன், “நான் 1949 ஆம் ஆண்டு, பழைய திருச்சியிலிருந்த குளித்தலை வட்டம் இனும்பூர் புதுப்பட்டியில் பிறந்தேன். அந்த கிராமத்தில் அப்போது எந்த அடிப்படை வசதியும் கிடையாது. சாலை வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி இப்படி எதுவுமில்லாத ஊரில்தான் பிறந்தேன். என்னுடைய தொடக்கக் கல்வியை அந்தக் கிராமத்தில்தான் முடித்தேன். எங்கள் கிராமத்தில் நான்தான் முதல் பட்டதாரி. தற்போது சேவை அமைப்பை நடத்தி வருகின்ற கோவிந்தராஜன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.

கிராமப்புற மக்களிடையே, பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊட்டச்சத்து மற்றும் நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக 1986 ஆம் ஆண்டு SCOPE ஐ தொடங்கினேன். பெல்ஜியப் பேராசிரியரான அருள்தந்தை விண்டி (Fr. Windy) இன் பணியால் ஈர்க்கப்பட்ட பத்து ஆண்டுகள் (1976-1985) கிராமப்புற மேம்பாடு, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றேன். கிராமப்புற வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டேன். கிராமப்புற மக்கள் வாழ்க்கையை நடத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள் என்னை பாதித்தன. கல்வி நிதியுதவி திட்டத்தின் மூலம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் SCOPE இணைந்து செயல்பட்டது. மேலும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான நிலையான வாழ்வாதாரத் திட்டம் SCOPE இன் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மத்திய அரசின் திட்டத்தின்படி ஒரு கிராமத்தில் மருத்துவமனை கட்டும் பணியில் இருந்தேன். அந்த ஊருக்குச் சென்றபோது அங்கே கழிப்பிட வசதி இல்லை. எனக்கு ஒத்துவராது என்பதை அறிந்துகொண்டு, அங்கே இருந்த ஒரு பெரியவரிடம் இந்த இடத்தில் 3 அடிக்கு 3 அடி குழி வெட்ட சொன்னேன். சுற்றி பனை ஓலைகளைக் கொண்டு மறைக்கச் சொன்னேன். பின்பு திருச்சி வந்து சிமெண்ட் கோப்பையை வாங்கிக் கொண்டு அங்கே சென்றேன். பின்பு கொத்தனாரை அழைத்து அந்த கோப்பையை வைத்து பூச சொன்னேன். அந்த கழிப்பிடத்தைத்தான் நான் தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இதை ஊர் மக்கள் அனைவரும் வந்து பார்த்து சென்றார்கள்.

யாவரும் கேளீர்புத்தூர் கிராமத்திற்கு மாற்றி அங்கு ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதற்காக என்னை நியமித்தார்கள். மக்கள் பங்களிப்பு இல்லையென்னால் அந்தத் திட்டம் சரியாக வெற்றிபெறாது என்று ஆரம்பத்திலேயே அருள்தந்தை விண்டி சொல்லி கொடுத்தார். வீடு கட்டும் பணியில் அந்த வீட்டுக்காரர்கள் 100 நாள் வேலை செய்யவேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

இந்த நேரத்தில் எனக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் முடிந்து என் மனைவி ஊருக்கு மறுவழி சென்றேன். காலையில் அங்கே ஒரு நண்பரைப் பிடித்து காலை கடன் முடிக்க அவரோடு சென்றேன். வழியில் பெண்கள் வரிசையாக மாப்பிள்ளை கிளம்பிவிட்டார் என்று சொல்லும்போது எனக்கு வெட்கம் வந்துவிட்டது. பின்பு என் மாமனார் டாய்லெட் கட்ட தேவையான பொருள்களை வாங்கி கட்டத் தொடங்கினார்.

1986 லிருந்து 96 வரையில மகளிர் மன்றங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு ஒரு நிறுவனத்தின் மூலமாக அவர்களுக்கு மாடுகள் எல்லாம் வாங்கி கொடுத்தோம். உங்களுக்கு ஒரு மாடும் கன்றுக்குட்டியும் கொடுப்பேன். அடுத்த கண்ணுக்குட்டி போடும்போது எனக்கு இந்த கன்றுக்குட்டிய கொடுக்க வேண்டும். இந்த கன்றுக்குட்டிய இன்னொருத்தருக்கு நான் கொடுப்பேன். உங்கள வச்சுதான் கொடுப்பேன். அப்படின்னு சொன்னேன் அப்ப உனக்கு இலவசம் இல்லை. உண்மையாவே அந்த திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டது. மக்களுக்கு மகிழ்ச்சி. எதுலையுமே ஒரு புதுமை இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அதாவது பொதுமக்களுடைய பங்களிப்பு வேணும் என்னும் என்னுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறியது” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அங்குசம் அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் சிறப்புரையாளர் பத்மஸ்ரீ சுப்புராமன் அவர்களுக்கு இதழ்களைப் பரிசாக வழங்கினார்.

 

  —    ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.