தந்தையைப்போல் மஞ்சளை விரும்பும் முதல்வர் !
மேலும் மஞ்சள் நிறம் இது உயிர், வெப்பம், ஆற்றல், ஒளி மற்றும் படைப்பாற்றல் தொடர்பான ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் சூரிய ஒளியை நினைவூட்டுகின்ற வண்ணமாக கருதப்படுகிறது, அதோடு மனம், உடல் மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. மகிழ்ச்சி, ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிறம் இது. கவனம், அறிவாற்றல், மனநலத் திறனையும் இந்த வண்ணம் அதிகரிக்கும். இப்படி மஞ்சளைப் பற்றி பல்வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும் மஞ்சள் என்பது கடவுளின் நிறம் என்றும் மங்களகரத்தின் நிறம் என்றும் பொதுக் கருத்தும் உள்ளது.
தற்போது மஞ்சளை பற்றி செய்தி வெளியிட என்ன காரணம் என்று தானே கேட்கிறீர்கள், வாருங்கள் பார்ப்போம்…
திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அரசியலில் முக்கியத்துவம் பெற்ற பிறகு தன்னுடைய அடையாளங்கள் சிறிய மாற்றங்களை செய்து கொண்டார். இவ்வாறு கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டை அணிந்து கொண்டார். மஞ்சள் என்பது மங்களகரம், இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும், சுப காரியத்திற்கான அடையாளம் இதை கலைஞரின் அணிந்திருப்பதன் மூலம் கலைஞர் இறைமறுப்பாளர் அல்ல என்று பல்வேறு விமர்சனங்கள் அந்த காலத்தில் எழுந்தன.
ஆனாலும் கலைஞர் இப்படியான எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தி கொள்ளாமல் தனக்கு ராமதாஸ் அணிவித்த மஞ்சள் துண்டை தனது தோளில் ஏந்தி அவருடைய இறுதிக் காலம்வரை பயணித்தார். மேலும் கலைஞரை அடையாளம் சொல்வதற்கான ஒரு பொருளாகவும் மஞ்சள் துண்டு பேசப்பட்டது.
இப்படி மஞ்சள் திமுக தலைவராக இருந்த கலைஞரின் அன்றாட வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
இது ஒருபுறமிருக்க, கலைஞரின் வாழ்க்கையில் மஞ்சள் எப்படி ஒரு அங்கமானதோ, அதேபோல தற்போது கலைஞரின் மகனும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் மஞ்சளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிறுத்தி மஞ்சள் பை இயக்கத்தை தொடங்கினார். இப்படி மஞ்சள் பையை ஒவ்வொரு வீடுகளிலும் மீண்டும் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் அரசு விளம்பரங்கள் அனைத்தையும் மஞ்சள் நிறத்தில் வெளியிட அதிரடியாக வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருக்கிறாராம்.
இதனால் அரசு விளம்பரங்கள் அனைத்துமே மஞ்சள் நிறத்தில் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. இவ்வாறு இன்று டிசம்பர் 30ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக அரசின் சார்பில் பல்வேறு விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அனைத்து விளம்பரங்களிலும் மஞ்சள் நிறம் இருப்பது, தந்தையின் பாணியைப் பின்பற்றி மஞ்சளை விரும்பும் முதல்வராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.