கேமராவை விற்று படம் எடுத்த தயாரிப்பாளர்!
‘கோவை பிலிம் ஃபேக்டரி’ பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் படம் ‘யெல்லோ’ ‘(Yellow)
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நேற்று ( நவம்பர் 11) காலை நடந்தது.
இதில் பேசியவர்கள்…..
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத்
“இது என் முதல் மேடை. என்னை நம்பி வாய்ப்பு தந்த பிரசாந்த் அண்ணனுக்கு நன்றி. ஹரி அண்ணாவின் பெரும் உழைப்பில் இப்படம் உருவாகியுள்ளது”.
ஹரிஉத்ரா புரொடக்சன்ஸ் உத்ரா “இப்படி ஒரு தரமான படத்தை வெளியிட என்னிடம் கொண்டு வந்த அஹமத்து க்கு நன்றி. இந்தப்படம் எல்லோரை யும் ஒரு டூர் கூட்டிப்போவது போல், மகிழசிப்படுத்தும்”.

ஹீரோ வைபவ் முருகேசன்
“நான் ‘பேட்ட’ படத்தில் பேக்ரவுண்ட் ஆர்டிஸ்டாக ஆரம்பித்து, ‘வதந்தி’ முதல் பல படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இப்போது நான் நாயகனாக நடித்த ‘யெல்லோ’ படம் திரைக்கு வருகிறது. பிரசாந்த் பிரதர் பல தடைகளைத் தாண்டி, இப்படத்தை முடித்து திரைக்குக் கொண்டு வந்துள்ளார். இப்படம் ஒரு டிராவல் படம் என்பதால் பல இன்னல்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இப்படத்தை அருமையாக இயக்கியுள்ளார் ஹரி. பிரபு சாலமன் எங்களை நம்பி, ஒரு கதாப்பாத் திரத்தில் நடித்துத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இது என் முதல் படம் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள்”.
இயக்குநர் ஹரி மகாதேவன்
“தயாரிப் பாளர் பிரசாந்த் அண்ணாவுக்கு நிறைய கடமைப்பட்டுள்ளேன். பூர்ணிமா தான் அவரை அறிமுகப்படுத்தினார். கொரில்லா மேக்கிங் ஸ்டைலில் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு பயணம் போவோம், என்ன கிடைக்கிறதோ அது தான் படம் என்றேன். இதைக்கேட்ட பிறகும் அவர் என்னை நிராகரிக்கவில்லை. என்னை முழுதாக நம்பினார். பின்னர் ஒரு திரைக்கதையை முழுதாக எழுதி அவரிடம் காட்டினேன். நான் நினைத்ததை விடப் பெரிய அளவில் அவர் ஆதரவாக இருந்தார். அவரின் கேமரா யூனிட் டை வித்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
பல கம்பெனி ஏறி இறங்கிய பிறகு, எங்களை நம்பி, எங்கள் படத்தைப் பார்த்து வெளியிட முன்வந்த ஹரிஉத்ரா புரொடக்சன்ஸுக்கு நன்றி. என்னுடன் திரைக்கதையிலிருந்து முழுதாக சப்போர்ட்டாக இருந்த ஹரிஷ்மாவிற்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி”.
ஹீரோயின் பூர்ணிமா ரவி
“இந்த விழா நேற்று வரை கனவாக இருந்தது. எஙகள் படத்தின் இசை விழா என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ், பணம். ஆனால் இந்தப்படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக்கொண்டோம். பலருக்குப் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி உழைத்துள்ளோம். இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனில் உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. மீடியா நண்பர்களே படத்தைப் பார்த்து நல்ல கருத்துக்களை எழுதுங்கள்”.
ஹரிஉத்ரா புரொடக்சன்ஸ் தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது.
நடிகர்-நடிகைகள்
வைபவ் முருகேசன்,
பூர்ணிமா ரவி,
சாய் பிரசன்னா,
நமீதா கிருஷ்ண மூர்த்தி,
லீலா சாம்சன்,
டெல்லி கணேஷ்,
பிரபு சாலமன்,
வினோதினி
தொழில் நுட்பக் குழு
எழுத்து, இயக்கம் : ஹரி மகாதேவன்
இசை : ஆனந்த் காசிநாத்
ஒளிப்பதிவு:அபி ஆத்விக்
எடிட்டர் : ஶ்ரீ வாட்சன்
கலை இயக்கம்: கார்த்திக் கிருஷ்ணன்
பி.ஆர்.ஓ: பரணி அழகிரி
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.