அங்குசம் சேனலில் இணைய

ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி ! ஆறு பேர் காயம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலியானார். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பால் நிகழ்சசி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்காக ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த கிங் பாய்ஸ் ஆடல் பாடல் குழுவினர் ஈச்சர் வாகனத்தில் இசைக்கருவிகள் ஏற்றிக்கொண்டு ஏற்காடு வெள்ளக்கடை கிராமம் வந்தனர்.

அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று 03.05.2023அதிகாலை சுமார் 5 மணி அளவில் ஸ்பீக்கர் பாக்ஸ் ஏற்றிகொண்டு திரும்பி சென்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அவர்களது வாகனம் குப்பனூர் மலைப்பாதையில் ஆத்துப்பாலம் அருகே வந்து கொண்டிருக்கும் போது வண்டி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தில் மோதி விபத்துகுள்ளானது.

இதில் ஓமலூர் பகுதியில் வசிக்கும் பழனிசாமி மகன் பெரியசாமி (32) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.

மேலும் வண்டியின் டிரைவர் குணசேகரன் மகன் மோகன்ராஜ் (26) அதிக்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.மேலும் எடப்பாடி பகுதியில் வசிக்கும் துரைசாமி மகன் செல்வம் (28) பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஏற்காடு விபத்து
ஏற்காடு விபத்து

அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், தேவராஜ், சக்திவேல், ராஜாஆகியோருக்கு கால் மற்றும் கையில் அடிபட்ட நிலையில் ஏற்காடு, வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி ஏற்காடு காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ் மோகன் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்தவரின் உடலை கைபற்றி உடற்கூறு ஆயவிற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் இதே ஏற்காடு – குப்பனூர் மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி ஆறு பேர் காயமடைந்தனர்.

அதேபோல கடந்த ஞாயிறு அன்று ஏற்காடு நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த தந்தை மகள் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் ஏற்காட்டிற்கு வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.