டிஸ்கவுண்ட்க்கு ஆசைப்பட்டா இழக்க வேண்டியது இது மாதிரி பல மடங்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சமீபத்தில் ஒரு  பைக் எடுக்கலாம்னு  ஷோரூம் போயிருந்தேன், விலை கேட்டால் பைனான்ஸ்ஸா கேஷாங்கிற கேள்வி வந்திச்சு, கேஷ்னு சொன்னதுக்கு ஒரு விலை சொன்னாங்க,  பைனான்ஸ்னா என்ன விலைன்னு கேட்டதுக்கு ஒரு நாலாயிரம் டிஸ்கவுண்ட் சொன்னாங்க.

Finance ஸ்டாப் ஒருத்தர் சார் உங்க ஆதார் கார்டு நம்பர், பேன் நம்பர் போட்டால்தான் என்ன இண்டிரஸ்ட் ரேட்னு எங்க ஆப்ல தெரியும்னு சொன்னான், எனக்கு ஏற்கனவே  finance ல வண்டி எடுத்து preclose பண்ணி Noc டாக்குமெண்ட் வாங்க சிரமப்பட்டதால  ப்ரைவேட் பைனான்ஸ்ல எடுக்கிற ஐடியா இல்லின்னு சொன்னேன்.

Sri Kumaran Mini HAll Trichy

டிஸ்கவுண்ட் சேல்
டிஸ்கவுண்ட் சேல்

Flats in Trichy for Sale

இல்ல சார் இண்டிரஸ்ட் ரேட் மட்டும் செக் பண்ணலாம்னு சொன்னாங்க, சரி ஓகே சிபில் செக் பண்ணனுமான்னு, வேணாம் சொன்னதுக்கு இல்லின்னு சொல்லிட்டு (அப்பவே சீட்டிங் ஸ்டார்ட்) otp வாங்கி சிபில் செக் பண்ணி புல் லோன், டாகுமெண்ட் இல்லாம பெர்சனல் லோன் மாதிரி கொடுக்கிறோம் சார் மாதம் இவ்வளவு emi னு எழுதி கொடுத்தாங்க.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

என்ன இண்டிரஸ்ட் ரேட்னு கேட்டதுக்கு 10.5% சார் ப்ராசிசிங் பீஸ் னு 5% ம் இன்சூரன்ஸ் அமவுண்ட் சுமாரா 3% ம் சொன்னாங்க, நான் வெளில வந்து கால்குலேட் பண்ணினால் 19.5 % இண்டிரஸ்ட் ரேட் வந்திச்சி, கால் பண்ணி கேட்டால் எனக்கு கால்கெலேட் பண்ணத்தெரில அது அந்த மாதிரி, இந்த மாதிரின்னு சமாளிப்பு..,

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன கொடுமைன்னா நாலாயிரம் டிஸ்கவுண்ட்க்கு ஆசைப்பட்டா இழக்க வேண்டியது அது மாதிரி பல மடங்கு, ஒன்னும் தெரியாதாவன் இவனுககிட்டே மாட்டினா மிளகாய் அரைச்சிடுவானுக, கந்து வட்டிக்கும் இந்த ப்ரைவேட் பைனான்ஸ்ம் ஒன்னுதான், கொடுமை என்னன்னா ஷோரூம் ஸ்டாப்ஸ்ம் இதுக்கு உடந்தை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.