தேனி – 20 வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ! மீட்க போராடும் வாகன உரிமையாளா்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து இதுவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்காததால் வாகன உரிமையாளர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்.
தேனி மாவட்டத்திலிருந்து மாலை கோவில் சங்கம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவிற்கு கடந்த 3.1.25 மதுரைக்கு ஏராளமான வாகனங்கள் சென்றது.
அப்பொழுது ஆண்டிபட்டி காவல்துறையினர் மறுநாள் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற 20 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின்னர் ஆண்டிபட்டி காவல்துறையினர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் 21 நாட்களாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் வாகனங்களை ஒப்படைப்பு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆண்டிப்பட்டி காவல்துறையினர் இதுவரை வாகனங்களை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த 21 நாட்களாக வாகனகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்காத காரணத்தால், வாகன உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தங்களுடைய வாகனங்களை ஒப்படைக்க கோரி தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத்திடம் புகார் மனு அளித்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்.
Thanks for finally writing about > தேனி – 20 வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் !
மீட்க போராடும் வாகன உரிமையாளா்கள்!
– Angusam News – Online News Portal about Tamilnadu < Loved it!