அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘யூத்’  

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘பார்வதா எண்டெர்டெய்ன்மெண்ட்’ கருப்பையா சி.ராம் & சுலோச்சனா குமார். டைரக்‌ஷன் : கென் & கேங், ஆர்ட்டிஸ்ட் : கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி சேத்தன், ஒளிப்பதிவு : விக்கி, இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங் : நாஷ், ஆர்ட் டைரக்டர் : ராமு தங்கராஜ், காஸ்ட்யூம் டிசைனர் : காவ்யா ஸ்ரீராம், பி.ஆர்.ஓ. : பரணி அழகிரி.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 35 மார்க் வாங்கி பாஸாகும் அளவுக்கு படிப்பில் ரொம்பவே சுமார் ரகம் நம்ம ஹீரோ கென். எப்படியாவது மகனை பெரிய தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என போராடி, பள்ளியின் பிரின்ஸ்பால் நளினியிடம் [ கேரக்டரின் பெயர் கென்னின் நிஜ அம்மாவான கிரேஸ் பெயர் தான்] விஷபாட்டிலைக் காட்டி பயமுறுத்தி சேர்க்கிறார் அம்மா தேவதர்ஷினி. பேக்கரி ஓனரான  அப்பா சுராஜ் வெஞ்சரமூடுவுக்கோ மகன் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. இதனாலேயே அப்பாவுக்கும் மகனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா?  கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ | Youth Movie Twitter Review: Ken Karunas and  Anishma Impresses with a Feel-Good ...பத்தாவது படிக்கும் போதே ஒரு பெண்ணை ஃபாலோ பண்ணி விரட்டுகிறார். ப்ளஸ்டூ படிக்கும் போது மீனாட்சி தினேஷை விரட்டி விரட்டி காதலிக்கிறார். திடீர்னு அனிஷ்மா அனில்குமாரை பார்த்ததும் அவரையும் லவ் பண்ணுகிறார்.  ”பொம்பள பொறுக்கியா இருக்காதடா” என கென்னின் நண்பர்களெல்லாம் எச்சரிக்கிறார்கள். இதனால் உண்மையாகவே அனிஷ்மாவை கென் லவ் பண்ண ஆரம்பித்து “ஐ லவ் யூ” சொல்லும் போது, “எனக்கு பெரிய கனவு இருக்குடா. உனக்கோ ஃபியூச்சரைப் பத்தின எந்த அக்கறையும் இல்ல, அதனால் உனக்கும் எனக்கும் செட்டாகாதுடா. ப்ளஸ்டூவுல நீ  பாஸ் பண்ணுனா உன்னை லவ் பண்றேன்” என கென்னின் லவ்வை ரிஜெக்ட் பண்ணுகிறார் அனிஷ்மா.

ப்ளஸ்டூவில் கென் பாஸானாரா? அனிஷ்மா ஏத்துக்கிட்டாரா? இதான் இந்த ‘யூத்’.

முதல்வர் பிறந்தநாள்

எழுத்து-இயக்கம் கென் & கேங் என டைட்டில் கார்டில் போட்டதற்காகவே கென் கருணாஸைப் பாராட்டலாம். டைரக்‌ஷனில் தனக்கு உதவியாக இருந்தவர்களுக்கும் டைட்டில் கார்டிலேயே கிரெடிட் கொடுத்தது பெரிய ஆச்சர்யம் தான்.

ஆக்‌ஷன் சீக்வென்ஸுக்கு வேலை இல்லை என்றாலும் லைட் மூவ்மெண்ட் டான்ஸிலும் நடிப்பிலும் டிஸ்டிங்ஷனில் பாஸாகிவிட்டார் கென். அதிலும் க்ளைமாக்ஸில்  சுராஜ் வெஞ்சரமூடு, தனது மனைவி தேவதர்ஷினியைப் பற்றிச் சொல்லும் சீனில் கண்கலங்கி உருக வைக்கிறார் கென். நடுத்தரக் குடும்பத்து இளைஞனின் நிறம், குணம், உடல் மொழி, முகபாவனை, வசன உச்சரிப்பு,  என யூத்துகளை மட்டுமல்ல, சீனியர்களையும் கவர்கிறார் நம்ம கென்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஹீரோயின்களில் அனிஷ்மாவுக்கு மட்டும் தான் அதிக சீன்களும் நடிப்பிற்கான ஸ்கோப்பும் இருக்கு. மீனாட்சி தினேஷுக்கு அவ்வளவாக வேலை இல்லை. இன்னொரு ஹீரோயின் பிரியன்ஷி யாதவ்வின் முகம் ரொம்பவே அன்னியமாக தெரிகிறது. ஆலப்புழாவுக்கு டூர் போன இடத்தில் கென்னும் அவரது ஃப்ரண்ட்ஸும் பிரியன்ஷியை வெறுப்பேத்தும் சீன்கள், தேவையில்லாத ஆணிகள்.

யூத் - காதல் குழப்பம்: கென் வாழ்க்கையில் திருப்பம். Youth - Love Confusion:  Ken's Life Takes a Turn.சுராஜ் வெஞ்சரமூடு-தேவதர்ஷினி ஜோடி செம பொருத்தம். தன்னை ஒரு மனுஷனாக்கி, பேக்கரிக்கு ஓனராக்கிய தேவதர்ஷினியைப் பற்றி கென்னிடம் சொல்லிவிட்டு, “அவளா..நீயான்னா….எனக்கு அவதாண்டா முக்கியம்” என பொங்கி வெடிக்கும் சீனில் சுராஜ் வெஞ்சரமூடு…சூப்பர் சுராஜ். அதே போல் தேவதர்ஷினியும் சும்மா சொல்லக் கூடாது. மகனுக்காக கணவனிடம் பரிந்து பேசுவது, மகன் பாஸாவதற்காக பூஜையில் வைத்த எலுமிச்சைப் பழத்தை ஜூஸ் போட்டு, அவனுக்குக் கொடுப்பது, தனது அண்ணன் வீட்டில் அவமானப்பட்டு திரும்பும் போது கலங்குவது என தேவதர்ஷினியும் அசர வைக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின்  “அடி முட்ட கலக்கி” பாடலும் பின்னணி இசையும் யூத்துக்கு இளமைத் துள்ளலாக இருக்கு. கேமராமேன் விக்கியும் இந்த யூத் டீமுடன் சேர்ந்து ஃபாஸ்டாகவும் சூப்பராகவும் வேலை செஞ்சிருக்கார்.

பொறுக்கிகளை, ரவுடிகளை, படிப்பில் கூமுட்டைகளை மட்டுமே செலக்ட் பண்ணி லவ் பண்ணும்  தமிழ் சினிமா ஹீரோயின்களின் புத்தி சுவாதீனக் கோளாறு இந்த யூத்திலும் இருக்கு. அதே போல் பிரதீப் ரங்கநாதன் -அஸ்வத் மாரிமுத்து காம்போவின் சூப்பர் ஹிட்டான ‘டிராகன்’ க்ளைமாக்ஸை அப்படியே சுட்ருக்கு கென்& கேங்.

மத்தபடி யூத்துகளை ‘அட்ராக்ட்’ பண்ணும் இந்த ‘யூத்’.

அங்குசம் பார்வையில் ‘யூத்’   55/100

—  ஆண்டவா்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.