கிறிஸ்தவ போதகர்கள் மீது அவதூறு பரப்பிய  யூடியூபர் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கிறிஸ்தவ போதகர்கள் மீது அவதூறு பரப்பிய  யூடியூபர் கைது !

 யூடியூபர்  சார்லஸ் கைது !
யூடியூபர் சார்லஸ் கைது !

 

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

பிரபல கிறிஸ்துவ மத போதகர் மோகன்.சி. லாசரஸ் மீது யூடியூபில் அவதூறு பரப்பிய யூடியூபர் கைது !

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் என்ற கிறிஸ்தவ மத போதனை ஊழிய ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்தாபனத்தின் நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் என்பவர் அப்பகுதியில் கிறிஸ்தவ மத போதனையுடன் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மற்றும் சமூக சேவைகள், தொடர்ந்து செய்து வருகிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நாலுமாவடியில் உள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் இடத்திருக்கு பல லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இவடைய கிறிஸ்தவ மத போதனையில் கலந்து கொள்வது வழக்கம் .

சினிமா இயக்குநர் மோகன்ஜியுடன்
சினிமா இயக்குநர் மோகன்ஜியுடன்

தமிழகம் முழுவதும்  இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் கிளைகள் உள்ளது.   நாலுமாவடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களின் நீர் ஆதாரத்திற்காக அப்பகுதியில் உள்ள நீரோடைகள் தூய்மைப்படுத்தவும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த நிலையில் மோகன் சி லாசரஸ் மீது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் சென்னைய சேர்ந்த சார்லஸ் என்பர் யூடியூபில் அவதூறு பரப்பியவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சார்லஸ் இவர்  ஆக்டிங் கிறிஸ்டியன் 3.0 என்ற youtube சேனல் மூலம் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஊழிய ஸ்தாபனங்கள் மீது பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவதும் அவர்கள் குடும்பத்தார் மீது அசிங்கமான குற்றச்சாட்டுகள் கூறி வந்தார். இவருடைய சேனலுக்கு பலமுறை பல கிறிஸ்தவர் போதகர்கள் ரிப்போர்ட் செய்தும் தொடர்ச்சியாக புதிய புதிய சேனல்கள் உருவாக்கி அவதூறு பரப்புவது தொடர் கதையாக இருந்து வந்தது.

மோகன் சி லாரன்ஸ்.. குறித்து
மோகன் சி லாரன்ஸ்.. குறித்து

இந்த நிலையில் பிரபல மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது அவதூறு பரப்பிய விசயம் அறிந்த ஏரல் பகுதியைச் சார்ந்த சாந்தகுமார் என்பவர் மேற்படி யூடியூபர் சார்லஸ் மீது தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குரும்பூர் காவல் நிலைய காவல்துறையினர் யூடியூபில் அவதூறு பரப்பி வந்த சார்லஸ் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர் பின்னர் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் குபேரசுந்தம் முன்பு  சார்லஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி வருகிற 24-ஆம் தேதி வரை சார்லஸ் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

கடைசியாக போட்ட வீடியோ
கடைசியாக போட்ட வீடியோ

பிரபல மத போதகர் மீது அவதூறு பரப்பிய விசயம் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவதூறு பரப்பிய சென்னை வாலிபரை தூத்துக்குடி போலீசார் அதிரடியாக கைது செய்தது இருப்பது குறிப்பிடதக்கது. !

இந்தநிலையில் இவர் கிறிஸ்தவ போதகர்கள் குறித்த வீடியோகள் இன்னும் சமூகவலைதளங்களில் நீக்கப்படாமல் உள்ளது. குறிப்பிடதக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.