15 ரூபாய் கடனுக்காக  அடித்து கொலை ! போதை பொருள் விற்ற தந்தை மகன் கைது!!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

15 ரூபாய் கடனுக்காக  அடித்து கொலை ! போதை பொருள் விற்ற தந்தை மகன் கைது!!

 

திருப்பத்தூர் :  ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (36) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதை பொருள் விற்பனையாளர் ஞானசேகரன் என்பவரிடம் ஹான்ஸ் வாங்கி கொண்டு ரூ 15 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

செல்வத்தின் மகனான  சுரேஷ்குமார் தன்னுடைய மகனுடன் வெளியே சென்று வீடு திரும்பிய போது  ஞானசேகரன்  தன்னுடைய தந்தையிடம் போதை பாக்கு வாங்கிய  பாக்கி 15 ருபாயை  கேட்டுள்ளனர். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பின்னர்  கைகலப்பாக மாறியுள்ளது.

3
அடித்து கொல்லப்பட்ட சுரேஷ்
அடித்து கொல்லப்பட்ட சுரேஷ்

இதில் போதை பொருள் விற்பனையாளர்கள்   ஞானசேகரன் அவரது மகன் அன்பரசு ஆகியோர் சுரேஷ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார், இதில் சுரேஷ்குமார் படுகாயமடைந்து மயங்கிய நிலையில், இருந்த அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்குமார்  ஜனவரி 14 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

4

இதனை தொடர்ந்து சுரேஷ்குமாரை தாக்கிய போதை பொருள் விற்பனை ஆசாமிகள் ஞானசேகரன் அவரது மகன் அன்பரசு ஆகியோரை உடனடியாக கைது செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சுரேஷ்குமாரின் உறவினர்கள் உதயேந்திரம் – பேர்ணாம்பட் சாலையில் கற்களை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  உமராபாத் காவல்துறையினர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் மற்றும்  வாணியம்பாடி கோட்டாச்சியர் பானு (பொறுப்பு),  ஆகியோர் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி  கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உறுதி அளித்தனர் , இந்த நிலையில் நேற்று ஜனவரி 15 அன்று ஞானசேகரன் அவரது மகன் அன்பரசு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

கொலையாளிகள், ஞானசேகரன் அவரது மகன் அன்பரசு (1)
கொலையாளிகள், ஞானசேகரன் அவரது மகன் அன்பரசு (1)

குட்கா, பான்மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்குத் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

– மணிகண்டன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.