பெற்றோர்களே உஷார்!! சில்வர் குடத்தில் மாட்டிக்கொண்ட 2 வயது சிறுமி!
பெற்றோர்களே உஷார்!! சில்வர் குடத்தில் மாட்டிக்கொண்ட 2 வயது சிறுமி!
அகண்ட சில்வர் பாத்திரத்தில் கால் விட்டு விளையாடிய இரண்டு வயது சிறுமியின் இடுப்பு பாகம் வரையில் பாத்திரத்தில் மாட்டி கொண்ட சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தலை சேர்ந்த கூலி தொழிலாளியான பூபதி – பிரியா தம்பதியினரின் இரண்டு வயது மகள் மிதுலா ஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த சில்வர் பாத்திரத்தில் இறங்கி விளையாட முயன்ற போது எதிர்பாராத விதமாக உள்ளே மாட்டிக்கொண்டார்.
பாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் கதறி அழுது சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், குழந்தையை மீட்க போராடி முயன்று பார்த்து அருகில் உள்ள நாட்றாம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கட்டிங் எந்திரத்தை கொண்டு பாத்திரத்தை பக்கவாட்டில் வெட்டி பிளந்து சிறு கீறல் இன்றி சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
சிறு குழந்தைகளின் துடுக்குத்தணத்தை ரசித்து பழகும் பெற்றோர்கள்., குழந்தைகள் எளிதில் அணுக முடியாத அளவுக்கு இது போன்ற பொருட்களை வைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்.
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுவது; மின் சாதன பொருட்களில் கை வைப்பது; கூர்மையான காயங்கள் உண்டாக்கும் பொருட்களுடன் விளையாடுவது என குழந்தைகள் வளர்ப்பில் தேவை முன் எச்சரிக்கை! தேவை போதுமான விழிப்புணர்வு!!
– மணிகண்டன்