சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா துவங்கியது !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Samayapuram Mariamman Thaipusa Festival!
Samayapuram Mariamman Thaipusa Festival!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தமிழகத்தின் மிகவும் பிரசித்திபெற்ற சக்தி ஸ்தலங்களில் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும் ஆதி பீடமாகவும் பக்தர்களால் போற்றப்படுகின்ற சமயபுரம் சுயம்பு அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் தமிழகம் மற்றும் வெளிநாடு, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் இக்கோவில் மாரியம்மனிடம் பிரார்த்தனை செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனர்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

ஆயிரம் கண்ணுடையாள் என அனைத்து பக்தர்களாலும் வணங்கப்படுகின்ற இக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. முதல்நாள் நிகழ்ச்சியாக கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது .தைப்பூச திருவிழாவானது இன்று முதல் தொடங்கி வருகின்ற 26 – 01 -2024 வரை தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

3

அதன்படி இன்று காலை 6:00 மணி முதல் எட்டு மணிக்குள் மகர லக்னத்தில் என சொல்லப்படுகின்ற கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது .காலை 7 மணிக்கு மாரியம்மன் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு திருமஞ்சனம், பால், தயிர் , பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக திரவியங்களைக் கொண்டு தங்கக் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடைபெற்று , கொடிமரத்தில் மாரியம்மன் உருவம் வரைந்த திருக்கொடியை கோவில் சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழுங்க கொடி ஏற்றப்பட்டது.

Samayapuram Mariamman Thaipusa Festival!
Samayapuram Mariamman Thaipusa Festival!
4

சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று கொடிமரத்திற்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, கோயில் மணியக்காரர் பழனிவேல் மற்றும் முக்கியஸ்தர்கள், கோவில் அலுவலர்கள் .பக்தர்கள் பங்கேற்றனர்.அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று 6 மணிக்கு மகா தீபாராதனை அதனை தொடர்ந்து முதல் நாள் விழாவாக அம்மன் மரக் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்மவாகனம் பூத வாகனம் ,அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முன்னதாக ஒவ்வொரு நாளிலும் காலை 10 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பள்ளக்கில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.11-நாட்கள் நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவில், சிறப்பு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி உபயதாரர்களால் நடைபெறுகிறது.

9-ம்நாள் திருவிழாவில் மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ,மகாதீபாராதனையும், அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு திருவீதி உலா வந்து ஆஸ்தான மண்டபம் சேரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Samayapuram Mariamman Thaipusa Festival!
Samayapuram Mariamman Thaipusa Festival!

பத்தாம் நாள் திருவிழாவில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் திருக்கோவிலில் இருந்து அம்மன் தைப்பூசத்திற்காக கண்ணாடி பள்ளக்கில் எழுந்தருளி வழிநடை உபயம் கண்டருள மண்ணச்சநல்லூர் தாலுக்கா நொச்சியம் வழியாக வட திரு காவிரிக்கு சென்றடைகிறார்.

மேலும் முக்கிய நிகழ்வாக 25 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வட திருக் காவேரியில் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சியும்,26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரை அண்ணனிடம் தங்கை சீர்பெறும் நிகழ்ச்சியான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி வாண வேடிக்கையுடன் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறும்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளிப்பார்.மேலும் 11- நாள் திருவிழாவாக 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு வடத்திருக்காவேரி என சொல்லப்படுகிற நொச்சியம் ஆற்றில் இருந்து அம்மன் கண்ணாடி பள்ளக்கில் புறப்பாடாகி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 11 மணி அளவில் கோவில் ஆஸ்தான மண்டபம் சேரும் நிகழ்ச்சியும், அன்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று கொடி மரத்திற்கு அம்மன் புறப்பாடாகி துவஜாரோகணம் என சொல்லப்படுகின்ற கொடி படம் இறக்கி, இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கோவிலில் அர்த்த ஜாம பூஜை நடைபெற்று, தைப்பூச விழா நிறைவு பெறும்.

தைப்பூச திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

-ஜோஸ்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.