ஜி-5 யின் ‘சட்டமும் நீதியும்’ டிரைலர் ரிலீஸானது!
’18 கிரியேட்டர்ஸ்’ பேனரில் சசிகலா பிரபாகரன் தயாரித்து ஜி-5 ஓடிடியில் வரும் 18-ஆம் தேதி ஸ்ட்ரீமிங்காகவுள்ளது ‘சட்டமும் நீதியும்’-குரலற்றவர்களின் குரல்’ என்ற வெப்சீரிஸ். 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பருத்திவீரன்’ சரவணன் ஹீரோவாக நடிக்கும் வெப்சீரிஸ் இது. அறிமுக இயக்குனர் பாலாஜி செல்வராஜ் டைரக்ட் பண்ணியுள்ள இந்த சீரிஸில் ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக நடித்துள்ளார் சரவணன். உறுதிமிக்க பெண் கேரக்டரில் எம்.வி.நம்ரிதா நடித்துள்ளார். இப்போது ரிலீசாகியுள்ள டிரைலர், ‘சட்டமும் நீதியும்’ மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
— மதுரை மாறன்