தமிழகம் முழுவதும் 118 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பட்டியல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழகம் முழுவதும் 118 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு

 

தமிழகம் முழுவதும் 118 போலீஸ் இன்ஸ்பெக் டர்கள் டி.எஸ்.பி.க் களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களில் 111 பேருக்கு பணி நியமனம் வழங்கி அரசு 31.07,2019 உத்தரவிட்டது.

 

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இதில் சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் , திருச்சி மாவட்டங்களில் பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம் வருமாறு:-

 

சென்னை கொளத்தூர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் பதவி உயர்வு பெற்று, திருவள்ளூர் மாவட்ட மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவு டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சகாதேவன் பதவி உயர்வு பெற்று, சென்னை சேலையூர் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார். சென்னை நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.சுந்தரம் பதவி உயர்வு பெற்று, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆனார்.

 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

சென்னை ராஜமங்கலம் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். சென்னை உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகர், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். சென்னை மணலி புதுநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செய்யது ஜமால், சென்னை மேற்கு பயிற்சி பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

 

சென்னை மடிப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன், சென்னை மண்டல எஸ்.சி-எஸ்.டி.விஜிலென்ஸ் பிரிவு டி.எஸ்.பி. ஆனார். செங்கல்பட்டு இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அரியலூர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கோட்டூர்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

 

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர், நெல்லை மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டார். மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மணி, காஞ்சீபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. ஆக மாற்றப்பட்டார். சென்னை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆனார். சென்னை அண்ணாநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தேனி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஆக மாற்றப்பட்டார். சென்னை சூளைமேடு சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஏ.இளங்கோவன், மதுரை ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டார். சென்னை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன், சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். சென்னை உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணி, அதே பிரிவில் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதேபோல சென்னை உளவுப்பிரிவு இன்னொரு இன்ஸ்பெக்டர் செந்தில், அதே பிரிவில் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

சென்னை திரு.வி.க.நகர் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பஜானி, பெரம்பலூர் மாவட்ட மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவு டி.எஸ்.பி. ஆனார். பொன்னேரி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர், சென்னை போலீஸ் அகாடமி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமிகாந்தனும், சென்னை போலீஸ் அகாடமி டி.எஸ்.பி. ஆக பொறுப்பு ஏற்பார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சென்னை உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கனகராஜ், சி.பி.சி.ஐ.டி. ஆராய்ச்சி பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். சென்னை உளவுப்பிரிவு இன்னொரு இன்ஸ்பெக்டர் ஆல்ட்ரின், ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டார். சென்னை பூக்கடை சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முகமது நாசர், மதுரை பயிற்சி டி.எஸ்.பி. ஆக பதவி ஏற்பார்.

 

ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் லியோ, அதே பிரிவில் டி.எஸ்.பி. ஆனார். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு தலைமையக பிரிவு இன்ஸ்பெக்டர் மகேந்திரன், கமுதி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

 

சென்னை திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி, திண்டுக்கல் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பதவி ஏற்பார். சென்னை ராயலாநகர் சட்டம்-ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் கவுதமன், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். மாமல்லபுரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தேசிகன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டார்.

 

சென்னை பட்டாபிராம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், தஞ்சை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ். பி.யாக பதவி ஏற்பார். கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், திண்டுக்கல் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். சென்னை கோட்டூர்புரம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தஞ்சை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

 

சென்னை ஜெ.ஜெ.நகர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சுரேந்திரன், சென்னை செம்பியம் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிராங்க் டி ரூபன், நெல்லை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.யாக பொறுப்பு ஏற்பார். மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்சங்கர், மாநில உளவுப்பிரிவு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. யாக மாற்றப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக பதவி ஏற்பார். சென்னை நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராயப்பன் ஏசுநேசன், சென்னை வரதட்சணை ஒழிப்பு பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

திருச்சியில்  3 இன்ஸ்பெக்டர் துணை சூப்பிரண்டாக பதவி உயர்வு !

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பதவி உதவி பெற்று திருச்சி மாவட்ட குற்றப்பதிவேடுகள் துணைசூப்பிரண்டாகவும், திருச்சி அறிவு சார் சொத்துரிமை அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் திருச்சி மின்வாரிய ஊழல்தடுப்பு பிரிவு துணை சுப்பிரண்டாகவும், திருச்சி மாநகர குற்றப்பிரிவு பதிவேடுகள் பிரிவு இன்ஸ்பெக்டர் மணிகண்டன் திருச்சி கியூ பிரிவு துணை சூப்பிரண்டாகவும்,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.