தமிழக உளவுத்துறையில் அதிரடி காட்டி வரும் அதிகாரி..
தமிழக உளவுத்துறையில் அதிரடி காட்டி வரும் அதிகாரி..
ஆட்சி மாறினாலே உயர்மட்ட அதிகாரிகள் மாறுவதுண்டு. அதில் காவல் துறையை பொருத்தவரை சட்டம் மற்றும் ஒழுங்கு, உளவுத்துறை என பிரிவுகளில் சில நல்ல அதிகாரிகள் அமர்த்தப்படுவர்.
அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தல் ரிசல்ட் பிறகு காவல்துறை வட்டாரங்களில் ஒரு மிகப்பெரிய வெடி வெடித்தது.
அது வெறும் வெடியாக வெடிக்கும் என்று நினைத்தவர்கள் மத்தியில் அது வெடிகுண்டாக மாறியது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி ஆக பதவி ஏற்று இருப்பவர் டேவிட்சன் ஆசீர்வாதம்.. இவர் ஏடிஜிபி யாக பதவி ஏற்பதற்கு முன் செய்த விஷயம் ஒன்று இன்றுவரை காவல்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது. அது என்னவென்றால் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தான் பதவியேற்பதற்கு முன் கோயம்புத்தூர் மாநகர கமிஷனராக பதவி வகித்து வந்தார் அப்போது தனது கட்டுப்பாட்டில் இயங்கும் நுண்ணறிவு பிரிவு ஒருவகையில் உளவுத்துறை போன்றே செயல்படும் இத்துறையை ஒரே ஆர்டரில் இழுத்து மூட உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிக்கை வட்டாரங்களில் நமக்கு கிடைத்த செய்தி குறிப்பு நுண்ணறிவு பிரிவானது தலைமை அலுவலக தனிப்பிரிவு வழிகாட்டு நடைமுறை விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி காவல் ஆணையர் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் காவலர்கள் உள்ளிட்ட ஆளிநர்களுடன் கூடிய நுண்ணறிவு தகவல் சேகரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி பிரிவாகும் கோவை மாநகரில் நுண்ணறிவு பிரிவானது தற்போது கூடுதல் துணை ஆணையர் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் மற்றும் காவலர்களுடன் மேற்படி பணிகளுக்காக மாநகர காவல் ஆணையர் இன் நேரடிப் பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு தனி பிரிவாக இருந்து வருகிறது.
தற்போது கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் (ஸ்டேஷன் ஐஎஸ்) என தனியாக ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு மேற்படி அவர்கள் தங்களது காவல் நிலைய எல்லைக்குள் அதிகாரிகளுக்கு ஆதாயத்தை தேடிக் கொடுப்பது தனிப்பட்ட முறையில் தங்களுக்கு பொருளாதாரத்தை தேடி கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் காவல்துறைக்கும் நுண்ணறிவு பிரிவு என்ற பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் அவப்பெயரை உண்டாக்கும் வகையிலும் செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது இத்தகைய செயல்கள் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு என்ற பெயருக்கு மிகப்பெரிய இழுக்கினை உண்டாக்கும் வகையில் உள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் கோவையில் உள்ள எந்த ஒரு காவல் நிலையத்திலும் நுண்ணறிவு பிரிவு பணி என்ற தனியாக எந்த ஒரு காவலரும் நியமித்தல் கூடாது எனவும் நுண்ணறிவு பிரிவு காவலர் என்று பெயரினை யாரும் பயன்படுத்துதல் கூடாது எனவும் குறிப்பாணை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இக்குறிப்பாணையில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து காவல் உதவி ஆணையர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம் கோவை மாநகரம் ஆகியோர் முழுமையாக கடைப்பிடித்து குறிப்பானை பெற்றமைக்கு ஏற்பளிப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகர கமிஷனராக இருந்தபோது இதுபோன்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரி தற்போது எந்த துறையின் மீது அதிரடி காட்டினாரோ அதே நுண்ணறிவு பிரிவின் தமிழக ஏடிஜிபி ஆக பொறுப்பேற்று அமர்ந்துள்ளார். இதனால் ஏற்கனவே கோயம்புத்தூரில் வெடித்த வெடி மற்ற மாநகர் மாவட்டங்களிலும் வெடித்து விடுமோ என்ற அச்சத்திலேயே நுண்ணறிவு பிரிவு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனராம்..
-ஜித்தன்