சிறுமிகளை கற்பழித்த காமூக தாத்தா வேடிக்கை பார்க்கும் போலீஸ்..

0

சிறுமிகளை கற்பழித்த காமூக தாத்தா வேடிக்கை பார்க்கும் போலீஸ்..

திருச்சி மாவட்டம் முசிறியில் கணவனை இழந்து தனியாக தனது 13 வயது மகள் ஒருவரும் 7 வயது மகள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார் ஆதரவற்ற தாயொருவர். கடந்த மார்ச் 7ஆம் தேதி அத்தாய் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனியாக வீட்டிலிருந்த 13 மற்றும் 7வயது சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் வயது-55 எனும் எதிர்வீட்டு தாத்தா, எதிர்வீட்டு தாத்தா தானே என்று நம்பிக்கையில் சிறுமிகள் அவர் என்ன நோக்கத்தில் எண்ணத்தில் தங்களை தொடுகிறார் என்று அறியாத அச் சிறுமிகள் கடைசியில் அந்த வயதான தாத்தாவின் காமப்பசிக்கு இறையாகி உள்ளனர்.

கடைக்குச் சென்ற தாய் மீண்டும் வீடு திரும்புகையில் கண்கள் கலங்கியபடி அழுதுகொண்டே இருந்துள்ளனர் அந்த இரண்டு சிறுமிகளும், ஏண்டா அதான் அம்மா வந்துட்டேனே எதுக்கு அழுகிறீங்க.. என்று கேட்க அம்மாவிடம் சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று குழம்பியபடியே நின்று உள்ளனர். அதன்பின் சிறிது நேரம் கழித்து தனது 13 வயது மகள் அம்மா நீங்க எங்கள வீட்டுல டிவி பார்க்க சொல்லிவிட்டு கடைக்கு போனீங்க ஆனா எதுத்த வீட்டு தாத்தாவும் நீங்க இல்லாத நேரத்துல டிவி பார்க்க நம்ம வீட்டுக்கு வந்தாரு அப்போ நம்ம சின்ன பாப்பாவ மடியில் வைத்து கொஞ்சுவது போல விளையாடுவது போல இருந்தாரு அதுக்கப்புறம் என்னிடம் மேலே கை வைத்து தப்பா நடந்துகிட்டாரூ மா என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அத்தாய் சம்பந்தப்பட்ட நபரை போய்க் கேட்டபோது கொச்சை வார்த்தைகளில் பேசியதுடன் இதுதொடர்பாக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதனை அறிந்த அந்த 55 வயது தாத்தா சிங்காரம் தனது மகன்கள் ஆதரவில் தலைமறைவாகினர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் உதவி மைய களப்பணியாளர்கள் சிறுமிகளை மீட்டு குழந்தைகளுக்கான பாதுகாப்பு விடுதியில் விடப்பட்டனர். இந்நிலையில் மார்ச் 7ஆம் தேதி அளித்த புகாருக்கு முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 24 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர் அதிலும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளில் ஏழு வயது சிறுமி மட்டும் பாதிக்கப்பட்டதாக கணக்கில் எடுத்துக் கொண்டு மற்றொரு 13 வயது சிறுமியை விட்டு விட்டார்களாம் ஏனென்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது அது அப்புறமா பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டாராம்.

இந்நிலையில் சிறுமியின் தாய் காவல் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதை அறிந்த குற்றம்சாட்டப்பட்ட சிங்காரத்தின் இரண்டாவது மனைவி மகன் மோகன் சிறுமிகளின் அம்மாவை வீடு தேடி வந்து மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து முசிறி டிஎஸ்பி இடம் புகாரை தெரிவிக்க சென்றபோது சிங்காரத்தின் முதல் மனைவி மகன் சுதாகர் முசிறியில் போலீசாக இருப்பவர் 500 ரூபாய் பணத்தை சிறுமியின் தாயின் கையில் கொடுத்து புகாரினை வாபஸ் வாங்குமாறு மிரட்டியுள்ளார் உடனே சிறுமியின் தாய் உங்களுடைய குழந்தைக்கு இப்படி நிகழ்ந்தால் நான் 500 ரூபாய் பணம் கொடுத்தாள் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டுவிட்டு கண்ணீரிலே வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் போலீசுதான் இப்படி இருக்காங்களே திருச்சியில இருக்கிற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இருக்கு வந்து மேடம் என்ன ஆச்சு சம்பந்தப்பட்ட நபரை இன்னும் கைது செய்யாமல் இருக்காங்க நீங்க எதுவும் கேட்டீங்களா என்று கேட்டுள்ளார் உடனே அந்த அதிகாரி உனக்கு வேலையே இல்லையாமா அதான் குழந்தையை காப்பாத்தியாச்சுல்ல சும்மா போமா என்று ஆதரவு தர வேண்டிய அந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியை வெளியில் போக சொல்லிவிட்டாராம்.

மன உளைச்சலில் வெம்பி போனேன் அந்தத் தாய் ஒருகட்டத்தில் மாதர் சங்கத்தின் உதவியை நாட தற்போது மாதர் சங்கம் இந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டு போராட்ட களத்தில் குதித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகாவிடம் அங்குசம் செய்திக்காக பேசினோம்..

போலீசாரின் அலட்சியப் போக்கே இரண்டு சிறுமிகளுக்கு கிடைக்கவேண்டிய நீதி மறைக்கப்பட்டுள்ளது. தப்பு செய்தவர்கலோ வெளியே சுற்றிவர பாதிக்கப்பட்ட சிறுமியும் அவர்களது தாயும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ம் கோர்ட்டுக்கும் நீதி தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஒரு முக்கிய குற்றவாளியை பிடிப்பதற்கு போலிஸார் எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு மாதமா? இப்படிதான் மோசமாக இருக்கு நம்ம நாட்டு நிலைமை.. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக நாங்கள் முன்வந்து நிற்கிறோம் ஆனால் சம்பந்தப்பட்ட குழந்தைகள் அமைப்புகளோ கண்டும் காணாதவாறு இருக்கின்றனர். சிறுமிகள் பாலியல் விவகாரம் நாளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் குற்றவாளியை தப்பிக்க விடுவதில் சில அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இருப்பதால் அவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முசிறி டிஎஸ்பிடம் கோரிக்கை வைத்துள்ளோம்..

மேலும் இதுதொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்.பியிடம் பேசியபோது..

சிறுமி பாலியல் விவகாரம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வரவில்லை.. இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மூலம் சிறுமிகளுக்கு நீதி கிடைத்திடவும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்..

திருச்சி மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 126 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சரியான சாட்சிகள் இல்லாததால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு கிடைக்கவேண்டிய நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது இருப்பினும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பும் ஆதரவும் அளிக்க வேண்டிய அதிகாரிகளே ஒரு கட்டத்தில் செவிசாய்க்க பாதிக்கப்பட்டவர்களை குற்றம்சாட்டபட்ட நபர்கள் மிரட்டி வழக்கினை வாபஸ் செய்துள்ளனர்.

திருச்சி சிறுமிகள் விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் ஒரு காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.