கணவரின் சடலம் மருத்துவமனையில் மாறியதால் இறுதிச் சடங்கை  நடத்த முடியாமல் தவிக்கும் மனைவி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கணவரின் சடலம் மருத்துவமனையில் மாறியதால்
இறுதிச் சடங்கை  நடத்த முடியாமல் தவிக்கும் மனைவி!

 

கரோனா நோய்த் தொற்று காரணமாக தஞ்சாவூரில் நான்கு நாட்களுக்கு முன் இறந்தவரின் உடல் மருத்துவமனையில் மாறியதால், இறுதிச் சடங்கை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் அவரது மனைவி மற்றும் உறவினர்கள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

பட்டுக்கோட்டை கீழப் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (45). இவருக்கு மே 1-ம் தேதி கடுமையான காய்ச்சல் கடுமையாக ஏற்பட்டதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மே 3-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மே 6-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.


இதைத் தொடர்ந்து, அவரது மைத்துனர் தர்மா என்ற தர்மேந்திரன் என்பவர், கரோனா விதிப்படி இறந்தவரின் முகம் தெரியாதவாறு முழுவதும் மூடப்பட்ட நிலையில் இருந்த உடலை மருத்துவமனiயிலிருந்து அன்று மதியம் முறைப்படி பெற்று, இறுதிச் சடங்கு நடத்துவதற்காக கீரப்பாளையத்துக்கு கொண்டு சென்றார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இறுதிச் சடங்கின்போது பாலகிருஷ்ணனின் முகத்தை கடைசியாகப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்கு காரணம், அது பாலகிருஷ்ணனின் சடலம் அல்ல என்பதும் அவரது சடலத்திற்கு பதிலாக சுமார் 55 வயது மதிக்கத்தக்க வேறு ஒருவரின் சடலம் என்பதும் தெரிய வந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதுகுறித்து, உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு தெரியப்படுத்திய பாலகிருஷ்ணனின் உறவினர்கள், மாற்றி எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
சடலத்தை மீண்டும் கொண்டு வந்து மருத்துவமனையில் ஒப்படைத்து நான்கு நாட்கள் ஆன நிலையில், பாலகிருஷ்ணனின் சடலம் இதுவரை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

 

இதனால் இறுதிச் சடங்கை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர் அவரது மனைவி சங்கீதா மற்றும் உறவினர்கள். இதுபற்றி விசாரித்தபோது மருத்துவமனை தரப்பில் கூறுகையில், நோய்த் தொற்றால் இறந்தவர்களின் சடலத்தை அவர்களின் நெருங்கிய உறவினர் பார்த்து, அடையாளம் காட்டிய பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

 

அன்றைய தினம் 10 சடலங்கள் ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பிணவறை ஊழியரின் கவனக்குறைவு காரணமாக சடலம் மாறியிருக்கக் கூடும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாலகிருஷ்ணனின் சடலத்தை அவரது மைத்துனர் தாமோதரன் இங்கேயே அடையாளம் சரிபார்த்து எடுத்துச் சென்றிருந்தால் இக்குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்கின்றனர்.

சம்பவத்தன்றே இதுபற்றி மருத்துவமனை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு அதை பாலகிருஷ்ணனின் மனைவி சங்கீதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஏற்றுக் கொண்டு அமைதியாக சென்றுவிட்டனர்.

கரோனாவால் இறந்த பாலகிருஷ்ணனுக்கு லோகேஷ் (14), திவ்யா (10) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

\
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் உள்ளுர் செய்தியாளர் சங்கீதாவை தொடர்பு கொண்டு ‘பிரச்சினையை’ கிளப்புமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சங்கீதா சம்மதிக்கவில்லை. இப் பிரச்சினை செய்தியாக வெளியானால் அரசிடமிருந்து நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது எனக் கூறி அத் தொலைக்காட்சியின் தஞ்சாவூர் செய்தியாளர் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் அப்பெண் தஞ்சாவூரில் இன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார் என்கின்றனர் போலீஸார்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.