இலாகாவை பிரித்ததில் அமைச்சர் வருத்தம் ; பெயரை மாற்றி ஊபிகள் கொண்டாட்டம் !

0

திருச்சி மாவட்ட திமுகவின் முக்கிய புள்ளிகள் ஒருவராக இருப்பவர் கே என் நேரு. தமிழக அரசியலிலும், திமுகவின் தலைமையிலும் முக்கியமான ஒருவராக உள்ளவர். மேலும் இவர் திமுகவின் முதன்மைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாது திருச்சியில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி பெறவும் இவர் காரணமானவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றி பெற்றது முதலே உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று திருச்சி திமுகவின் உடன்பிறப்புகள், கே என் நேரு வாழ்த்தி போஸ்டர்களிலும், பிளக்ஸ் களிலும் மேலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்தை பதிவுச் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கே என் நேரு விற்கு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சித்துறை பாதியாக பிரித்து வழங்கிய இருப்பதன் மூலம் அமைச்சர் கே என் நேரு மிகவும் கோபத்தில் உள்ளாராம். மேலும் திமுகவின் உடன்பிறப்புகள் யாரிடமும் பேசாமல் தவிர்த்து வருகிறாராம்.
இதைத்தொடர்ந்து கே என் நேரு தன்னுடைய அதிருப்தியை தலைமைக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

உள்ளாட்சித்துறை என்று ஒரே துறையாக இருந்ததை பாதியாகப்பிரித்து, நேருவிடம் கொடுத்திருப்பதன் மூலம் நேருவின் செல்வாக்கை குறைப்பது போன்றது என்று நேருக்கு நெருக்கமான ஊபிகள் புலம்புகின்றனர்.

இதையெல்லாம் அறியாத திருச்சி மாவட்ட உடன்பிறப்புகள் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருக்கின்றனர். அதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.