விருதுநகர் – ஒரே நாளில் 14 சிறப்பு தனிப்படை காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்!
விருதுநகரில் ஒரே நாளில் 14 சிறப்பு தனிப்படை காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம். விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணி புரியும் தனிப்படை காவலர்கள் 14 பேர் அதிரடியாக மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக மாவட்டத்தில் தனிப்பிரிவு காவலர்களின் பணிகள் சட்டம் ஒழுங்கு குற்ற சம்பவங்கள் சட்ட விரோத நடவடிக்கை போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதே அவர்களின் முக்கிய பணி ஆகும்.
இது போன்று செயல்பட வேண்டிய தனிப்பிரிவு காவலர்கள் ஒரு சிலர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சட்டவிரோத பட்டாசு உற்பத்தி மணல் திருட்டு போன்ற சம்பவங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால்,

மாவட்ட கண்காணிப்பாளரின் கவனத்திற்கு சென்று ஒரு சில காவலர்கள் நேரடி விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டதாகவும், மேலும் ஒரு சிலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டும், சிலர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 14 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1) ஆமத்தூர் தனிப்பிரிவு காவலர் மாரிச்செல்வம் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும்,
2) எம்.புதுப்பட்டி தனிப்பிரிவு காவலர் ஜெயக்குமார் மல்லி காவல் நிலையத்திற்கும்,
3) மாரனேரி தலைமை காவலர் கார்த்தி தனிப்பிரிவு காவலராக சிவகாசி டவுன் காவல் நிலையத்திற்கும்,
4) சிவகாசி டவுன் தலைமை காவலர் சண்முகராஜ் மாரனேரி காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகவும்,
5) சிவகாசி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் திருத்தங்கள் தனிப்பிரிவு காவலராகவும்,
6) திருத்தங்கள் தலைமை காவலர் வீரராஜ் எம்.புதுப்பட்டி தனிப்பிரிவு காவலராகவும்,
7) எம்.புதுப்பட்டி காவல் நிலைய முதன்மை காவலர் பொன்னுச்சாமி சிவகாசி கிழக்கு காவல் நிலைய தனி பிரிவு காவலராகவும்,
8) சாத்தூர் டவுன் தனி பிரிவு காவலர் பாண்டியராஜன் வெம்பக்கோட்டை காவல் நிலைய தனி பிரிவு காவலராகவும்,
9) வெம்பக்கோட்டை தனிப்பிரிவு காவலர் கொத்தள முத்து சாத்தூர் டவுன் தனிப்பிரிவு காவலராகவும்,
10) அம்மாபட்டி காவல் நிலைய தனி பிரிவு காவலர் ராஜபாண்டி NH போக்குவரத்து காவலராகவும்,
11) மல்லி தனிப்பிரிவு காவலர் முத்துராமலிங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து பணி காவலராகவும்,
12) ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் தனிப்பிரிவு காவலர் சண்முகம் ஸ்ரீவில்லிபுத்தூர் தினசரி பணி காவலராக மாற்றப்பட்டும்,
13) மம்சாபுரம் தனிப்பிரிவு காவலர் ராமசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் தனி பிரிவு காவலராகவும்,
14) இருக்கன்குடி தனிப்பிரிவு காவலர் ஜெயபால் அம்மாபட்டி தனிப்பிரிவு காவலராகவும்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மொததம் 14 காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
— மாரீஸ்வரன்.