அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

15 வருட பலே கில்லாடி திருடன் ஸ்ரீதரன் கைது

0

திருச்சியில் அடகு நகையை விற்க

15 வருட பலே கில்லாடி திருடன் ஸ்ரீதரன் கைது

 

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் தனியாக நின்ற காரை அடித்து உடைத்து காரின் உள்ளிருந்த பொருட்களை கருப்பு பையில் திருடி சென்றனர். இது சிசிடி கேமராவிலும் பதிவாகியிருந்தது. இது குறித்து டிராவல்ஸ் ஊழியர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பெயரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரனை கைது செய்தனர்.

2026 January 1- 7 ANGUSAM Book அங்குசம் வார இதழ்

விசாரித்ததில் இவர் புங்கனூரைச்சேர்ந்தவன் என்பதும், தொடர்ந்து 15 வருடமாக திருட்டை மட்டுமே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. நூதனமாக திருடுவதில் கைத்தேர்ந்த இவர், மாட்டிகொள்ளமுடியாதபடி பல்வேறு திருட்டு சம்பவங்களை செய்துள்ளார். திருடவேண்டும் என முடிவு செய்தவுடன், இரண்டு பேராக சென்று முதலில் ஒருவன் கார் கண்ணாடியை உடைத்து திரும்பி பார்க்காமல் சென்றுவிடுவான்.
இதனால், காரின் உரிமையாளர் அவனைத் துரத்திக்கொண்டு ஓடுவார். அந்தநேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ஸ்ரீதரன் காரினுள் இருக்கும் பொருட்களை கருப்புப்பையில் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்.
இதேபோல,தொடர்ந்து திருட்டு குற்றங்களை இவர்கள் திருச்சி முழுவதிலும் செய்து வந்ததினால், பெரும்பாலான காவல்நி லையங்களில் இவர்கள் மீது வழக்கு போடப்பட்டது.
ஒரு கட்டத்தில் திருச்சியில் திருட்டு என்றாலே காவல் துறையினார் முதலில் இவர்களைதேடி வர ஆரம்பித்துவிட்டனர்.
இதனால், சரியாக இங்கு திருட முடியாததால், வடமாநிலங்களுக்குசென்று தங்களின் கைவரிசையை தொடர்ந்து காட்டி வந்தனர். திருடிய பிறகு காவல்துறையில் மாட்டிகொள்ளக்கூடாது என்பதற்காக, திருடப்போகும் போது பிச்சைக்காரன் மாதிரியும், திருடி முடித்தவுடன் ஹீரோவைப்போல் சுற்றுவதையும் ஸ்ரீதரன் வழக்கமாகக்கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் குடிக்க காசு இல்லாததால், திருச்சி, சத்திரம்பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் எதிரே நின்று கொண்டிருந்த காரில் வழக்கமான தோரணையில் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்நிலையில், அருகில் இருந்த சி.சி.டி.வி வீடியோ பதிவுகளை வைத்து தற்போது ஸ்ரீதரனை பிடித்துள்ளனர் காவல்துறையினர். மேலும், ஸ்ரீதரனுடன் திருடவருவது யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.