திருச்சி ரயிலில் கொள்ளை போன நகை- மீட்ட போலீசாருக்கு ஏடிஜிபி பாராட்டு..

0

திருச்சி ரயிலில் கொள்ளை போன நகை- மீட்ட போலீசாருக்கு ஏடிஜிபி பாராட்டு..

திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலை முத்துமணி டவுன் அருகே கடந்த 26.05.21 ஆம் தேதி ஹோம் சிக்னலில் சென்னை – மதுரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி (02637) நிற்கும் போது,

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்


அதில் S7 கோச்சில் பயணம் செய்த மதுரை அவனியாபுரம் சேர்ந்த முருகேசன் (வயது -63)
S/o நீலமேகம் என்பவருடைய மனைவியின் ஹேன்ட் பேக்கை, 20ல் இருந்து 25 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் ஹேண்ட்பேக்கை திருடி சென்றனர்.

இதுதொடர்பாக திருச்சிராப்பள்ளி இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் அடிப்படையில் புகார்தாரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் திருச்சி மத்திய ரயில் இருப்புப்பாதை காவல் நிலைய குற்றஎண் 34 | 2| U | S 379 IPL-ல் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அதில் அரியமங்களம் மேம்பாலத்திற்கு கீழ் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கி இருந்தவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் முற்பட்டபோது நாகூர் அனிபா (வயது -20) எனும் நபர் S/o கைது செய்யப்பட்டார்.

மேலும் போலீசார் பிடிக்க முற்பட்டபோது தப்பியோடிய ஜீவா நகரை சேர்ந்த துரைராஜ் , சூர்யா ஆகியோர் கடந்த 2/06/2021 காலை ஜீவா நகர் பகுதியில் இருப்பதை அறிந்து காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஜவான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கண்ட இரண்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் குற்றவாளிகளை பிடிப்பதில் அதிதீவிரம் காட்டி சிறப்பாக செயல்பட்ட திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவலர்களான காவல் உதவி ஆய்வாளர் ஜவான், காவல் உதவி ஆய்வாளர் கேசவன், குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் சபீர் அகமது, ராஜலிங்கம், ரங்க பாட்சே ஆகியோரை பாராட்டும் விதமாக ஏடிஜிபி ( காவல்துறை கூடுதல் தலைவர்) சந்தீப் ராய் ரத்தூர் நேரில் அழைத்து கௌரவித்தார்.

இந்தர்ஜித்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.