போலிசுக்கு பிரபல ரவுடி கொடுத்த புல்லட்கள் – கூண்டோடு மாற்றம் – அங்குசம் செய்தி எதிரொலி..
போலிசுக்கு பிரபல ரவுடி கொடுத்த புல்லட்கள் – கூண்டோடு மாற்றம் – அங்குசம் செய்தி எதிரொலி..
திருச்சி மாநகரில் சமீபத்தில் பிரபல தெய்வத்தின் பெயரை அடைமொழியாக கொண்ட ரவுடியை மாநகர போலீசார் விசாரணை செய்து வந்தது.
அந்த விசாரணையில் போலீசில் உள்ள சில கருப்பு ஆடுகளைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதில் திருச்சி மாநகரில் உள்ள தனி படையை சேர்ந்த சில தனிப்படை போலீசாரின் ஆதரவுடன் வெளியே வலம் வந்ததாக அந்த ரவுடி கூறியுள்ளார்.
மேலும் அந்த பஞ்சபாண்டவ போலீசாருக்கு புல்லட் வாகனம் வாங்கிக் கொடுத்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 29/07/2021 அன்று அங்குசம் செய்தி இணைய இதழில்
“போலீசுக்கு ரவுடி கொடுத்த புல்லட்கள்”
என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன்மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனிப் படையை சேர்ந்த போலீசாரை விசாரணை செய்ததில் புல்லட் வண்டி வாங்கியது உறுதிசெய்யப்பட்டது.
அதன்மூலம் நேற்று 13/8/2021 திருச்சி மாநகரில் பணியாற்றிய தனி படையை சேர்ந்த 4 போலீசார் அதிரடியாக மற்ற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
*போலீசுக்கு ரவுடி கொடுத்த “புல்லட்”..*
அதில் மாநகர காவல் ஆணையரின் தனி படையை சேர்ந்த
ஐன்ஸ்டீன், சரவணன், ஹில்லர் ஜேக்கப், ஜானி ஆகியோர் தனி படையிலிருந்து நீக்கப்பட்டு வேலூருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தனிப்படை குழுவின் சொத்து பட்டியலை விசாரித்தால் தலையை சுற்றும் என்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்..
– இந்தர்ஜித்