கல்வி மட்டும் போதாது! அட்வைஸ் சொன்ன ஐஜி!
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டு விழா 29.03. 2025 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். கல்லூரி படிப்பு என்பது ஓட்டுனர் உரிமம் போன்றது இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது ஆகையால் மாணவர்களுக்கு கல்வி மட்டும் போதாது பல்வேறு கல்வி சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள போதைப் பழக்கம் சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல் போன்ற தீமைகளை உடனடியாக விட்டொழிக்க வேண்டும் வாழ்வில் வெற்றி பெற தனிமனித ஒழிக்கும் மிக மிக இன்றியமையாததாகும்.
பெண் குழந்தைகள் மிகக் கவனமாக இருப்பது அவசியமாகும், தற்காப்புக் கலைகளை பயில்வது நலம் தரும், பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்துப் போற்ற வேண்டும், அவ்வாறு மதிக்கவில்லை எனில் எத்தனை உயர்ந்த கல்வி பெற்றாலும் பயன் இருக்காது. நமது கலாச்சாரம் பண்பாடு மொழி ஆகியவற்றின் சிறப்புகளை அறிந்து விட்டுக் கொடுக்காமல் காக்க வேண்டுவது மாணவர்களின் கடமை என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் நா. ஆனந்தவல்லி தலைமை உரையாற்றி ஆண்டறிக்கை உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு மாநில அளவிலும் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பு பரிசுகள் பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி அளவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர் பரிசுகள் பெற்றனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் முதல் தரத்தைப் பெற்ற கோல்டு மெடல் பெற்றஉளவியல் துறை மாணவி மௌனிகா பரிசு பெற்றார். பல்வேறு துறைகளில் பாரதிதாசன் பல்கலைக்கழ அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற 13 மாணவ மாணவியரும் பல்வேறு தரவரிசைகளைப் பெற்ற 23 மாணவ மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் மற்றும் புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொது நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் அப்துல் சலாம் அனைவரையும் வரவேற்றார். வணிகவியல் துறை தலைவர் செல்வேந்திரன் நன்றி கூறினார்.