அங்குசம் சேனலில் இணைய

தமிழ்நாடு காவல்துறைக்கு முன்னுதாரனமான திருச்சி காவல்துறைக்கு என்னாச்சு?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு காவல்துறைக்கு முன்னுதாரனமான திருச்சி காவல்துறைக்கு என்னாச்சு?

தமிழகத்தில் சென்னை தலைநகருக்கு அடுத்து மக்கள் தொகை, வணிகத்தளங்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய முக்கிய மாவட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தற்போது காவல்துறை தலைவராக இருக்கக்கூடிய சைலேந்திர பாபு அவர்கள், தான் பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை தீவிரமாக கையில் எடுத்து கண்காணித்து வருகிறார்.

அந்தவகையில் தமிழக காவல் நிலையங்களுக்கு, அடுத்தடுத்து ஒரு சில முக்கிய விதிளை பின்பற்ற கூறி அறிவுருத்தியிருந்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அதில் காவலர்கள் யாரும் தங்களது வாகனங்களில் போலிஸ், காவல் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக ஸ்டிக்கர் ஒட்டிருக்க கூடாது என்றும்,

மேலும் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து மாவட்ட மற்றும் மாநகர காவல்துறைக்கும் தங்களது கட்டுப்பாட்டில் வரக்கூடிய ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுப்படுபவர்களை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக இரவு நேரங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, வலிப்பறி போன்ற அசம்பாவிதங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுப்பட்டுருக்கக் கூடிய காவலர்களின் தொலைப்பேசி எண்ணினை தினமும் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தை திருச்சி மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனை அப்போதைய மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அறிமுகப்படுத்தினார்.
இதனை ஒவ்வொரு நாளும் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களின் மூலம் மக்கள் பார்வைக்கு கொண்டு சேர்க்க அறிவுறுத்திருந்தார்.

இதனை மற்ற மாவட்ட மற்றும் மாநகர காவல்துறைகளும் கையில் எடுத்து ஃப்லோ செய்ய தொடங்கினர்.
அந்த வகையில் மத்திய மண்டல மாவட்டங்களில் எத்தனை மாவட்டங்கள் இரவு நேர ரோந்து பணியை வெளியிட்டு வருகின்றனர் என்று அவர்களுடைய முகநூல் பக்கத்திற்கு சென்று பார்த்தபோது ஒருபக்கம் நமக்கு க்ஷாக் அளிக்கும் விதமாக தான் இருந்தது.


ஆம், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் திருச்சி இதனை ஃப்லோ பண்ண தவறவிட்டனர்.

இதுத்தொடர்பாக அங்குசம் செய்தியின் மூலம் கடந்த 26/12/2021 மாநகர நுண்ணரிவுப்பிரிவு துணை கமிக்ஷ்னர் செந்தில்குமாரிடம் பேசுகையில் அவர் கமிக்ஷ்னரிடம் தெரியப்படுத்திவிட்டு, அவரது உத்தரவு பெற்று வெளியிடுவதாக கூறினார்.

மேலும் இதுத்தொடர்பாக நேற்று 28/12/2021 அன்று மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்களிடம் பேசுகையில் அவர் அதனை வெளியிட சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் தெரியப்படுத்துவதாக கூறினார்.

ஒரு திட்டத்தை தாமாக முன்வந்து அறிமுகப்படுத்திய திருச்சி மாவட்ட காவல்துறையே தாங்கள் தொடங்கிய திட்டத்தை பின்பற்றாமல் பின்னுக்கு போனது பெறும் வருத்தத்தை அளித்து வருகிறது.

-இந்தர்ஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.