புல்லட் திருடன்- போலீஸ் கதை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புல்லட் திருடன்- போலீஸ் கதை !

மலைக்கோட்டையை மையமாகக் கொண்ட மாநகரில் கடந்த சில மாதங்களாகவே இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போகும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறிய வண்ணம் இருந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் காணாமல் போகும் வானங்கள் அனைத்தும் விலை உயர்ந்த வாகனங்களாகவே திருட்டு போகின்றன. அப்படிக் காணாமல் போன புல்லட்டை பற்றி உண்மைக்கதை தான் இது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

திருச்சியில் உள்ள காக்கிகளின் மொத்த தலைமையிடமாக இருக்கும் காவல் நிலைய எல்லைக்கு உட்டப்பட்ட பகுதியில் சமீபத்தில் ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியது. அச்சம்பவம் காவல்துறை வட்டாரங்கள் மட்டுமல்லாது அந்த பகுதி பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரவு தனது வீட்டிற்குக் சென்ற வாகனத்தின் உரிமையாளர். அப்போது தனது வீட்டு வாசலின் வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்த போது பக்கத்து வீட்டில் வாட்ச்மேன் நின்று கொண்டு இருப்பதையும், அதற்கு அடுத்து ஒரு ரைசன் ஜீப்பில் ஒரு போலிஸ்காரர் நின்று கொண்டு பேரிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து ஒரு தைரியத்தில் தனது புல்லட்டை வாசலில் வைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஒரு அரை மணிநேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த போது வாசலில் வைத்த புல்லட்டை இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நிறுத்தியிருந்த வாகனம் இங்கு தான் நிறுத்தினோமா என்று யோசிக்கும் அளவிற்கு தடையம் கூட இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது.

அருகில் இருந்த வாட்ச்மேனிடம் கேட்டபோது, இங்கே நின்று கொண்டு இருந்த போலிஸ் என்னை, என்ன பண்ணிட்டு இருக்க உள்ளே போய் என்று அதட்டி பேசவும் நான் உள்ளே போயிட்டேன் சார்… நான் பார்க்கவில்லை பதறி சொல்லியிருக்கார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

போலிசில் புகார் செய்த பின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது தான் தெரியவருகிறது. பல உண்மைகள், வாகனத்தின் உரிமையாளர் புல்லட்டை நிறுத்திய போது நின்ற சைரன் வைத்த ஜீப் அடுத்த 20 நிமடங்களில் மூன்று நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து வாகனத்தை சத்தமே இல்லாமல் உடைத்து எடுத்துச் செல்கின்றனர்.

மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க இன்ஸ்பெக்டர் வந்து விசாரனை செய்துள்ளார். அப்போது சிசிடிவி காட்சிகளை பார்த்த இன்ஸ்பெக்டருக்கே கொஞ்சம் பொறி தட்ட தொடங்கியுள்ளது.

சம்மந்தப்பட்ட சைரன் ஜீப் கொஞ்சம் தூரம் சென்ற பிறகு, சிறிது நேரத்திலேயே அதே வழியாக மூன்று பேர் பயங்கர ஆயுதங்களுடன் கரெக்டாக புல்லட் நிற்கும் இடத்தை ஏற்கனவே மார்க் செய்து வருவது போல் புல்லட்டை உடைத்து திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் பிறகு வெளியே சொல்லாமல் அந்த சைரன் ஜீப் இருந்த போலிஸ்காரர் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள்.

பிறகு குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி வீடியோ வைத்து விசாரிக்க ஆரம்பிக்க சரியாக ஒரு மாதத்தில் 7 புல்லட்டுகளளுடன் திருடன் சிக்க சம்மந்தப்பட்ட புல்லட் கொடைக்கானலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. திருடப்பட்ட புல்லட்டிற்கு திரும்பவும் 80,000 ரூபாய் வரை செலவு செய்து உள்ளார். செலவு பண்ணின பணத்தை திரும்ப வாங்க முடியாமல் வழக்கையும் நடத்திக்கொண்டிருக்கிறார் புல்லட்டின் உரிமையாளர்….

இப்படி தான் பல புல்லட்கள் மலைக்கோட்டையில இருந்து கொடைக்கானல் போன்ற பல மலைகளுக்கு ஏறிருக்கு என்றார்கள் விவரம் அறிந்த காக்கிகள்.

-இந்தர்ஜித்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.