ஐ லவ் யூ தலைவர் – வருங்கால பிரதமர் ; உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற திருச்சி அமைச்சர்!

0

நேற்று திருச்சி தாயனூர் பகுதியில் அமைந்துள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1,084 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு பேசுகையில்,

தளபதி தமிழக முதல்வராக பதவியேற்றது முதல் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை கைக்குள் வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தடுப்பு பணியில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கினார். கேரளாவில் அதிகரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பூஜ்ஜியம் என்ற நிலையை ஏற்படுத்தி, அதற்கு முக்கிய காரணம் தமிழக முதல்வரின் களப்பணி. மேலும் கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு இந்தியாவிலேயே எந்த முதல்வரும் செய்யாத பணியை செய்து காட்டியவர் தளபதி.

https://businesstrichy.com/the-royal-mahal/

மேலும் எப்போதும் இல்லாததாக சட்டமன்றம் விவாதங்களின் அடிப்படையில் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அதற்கு பிறகு மழை வந்தது, அப்போது அவருடைய அனுபவம் என்னவென்றால் பத்தாண்டு காலம் சென்னை மாநகர மேயராக இருந்து வழி நடத்தியதைப் போல சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சென்னையை சிறப்பாக வழிநடத்தினார். இவ்வாறு கொரோனா, சட்டமன்றம், மழை வெள்ளம் என்று தொடர் பணி பிறகு என்னை சேலத்திற்கு அனுப்பி மக்களிடம் மனுக்களைப் பெற்று 18 நாட்களில் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டிருப்பது, அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்றது. தற்போது திருச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கலைஞர் சொன்னது போல லட்சக்கணக்கான மக்களின் மனுக்களை பெற்று குறைந்த நாட்களில் அதற்கு தீர்வு கண்டு இருக்கிறார். மேலும் எதிர்க்கட்சிகள் சொல்வதற்கு முன்பாகவே மக்களிடம் சென்று குறைகளை கேட்டு தீர்வு கண்டுள்ளார், இப்படி காலை தஞ்சை,மாலை திருச்சி, இரவு சென்னை சென்று தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கூட்டணிக் கட்சிகள் அரவணைப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கூட்டணி கட்சிகளும் உங்களின் பணி தமிழ்நாட்டோடு நின்றுவிடாமல் இந்தியா முழுக்க வேண்டும் என்று பேச தொடங்கி இருக்கின்றனர். இப்படி நீங்கள் தமிழ்நாடோட நின்றுவிடாமல் நல்லதொரு ஆட்சியை இந்தியாவில் அமைப்பதற்கு உங்களால் தான் முடியும், அதற்கு நீங்கள் தான் இருக்கிறீர்கள் என்று உங்களை சொல்கிறார்கள்.

நான் கடந்த காலத்தை சொல்கிறேன் 91-92ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அவர்கள் இறந்துவிட்டார்கள். அப்போதுகூட மறைவுக்கு காரணமானவர்களுக்கும் எங்களுக்கும் தமிழ்நாடு தொடர்பு இல்லை என்று கூறியது.

போராட்டம், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் தற்போது வர இருக்கக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் என்று அனைத்து நேரங்களிலும் கூட்டணிக் கட்சிகளை விட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து, அங்கமாக வைத்து ஆட்சியை நடத்துவது கூட்டணிக் கட்சிகளின் பாராட்டைப் பெற்று இருக்கிறது. இதனால் கூட்டணிக் கட்சியினர் நெஞ்சுருக உங்களை பாராட்டுகின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அது தான் தளபதி, அது தான் தலைவர்… தலைவர் எவ்வழியோ… தளபதியும் அவ்வழியே..!

96- 2001-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் கலைஞர் 50 முறை திருச்சிக்கு வந்திருக்கிறார். 2006 – 2011ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்திலும் பல்வேறு முறை தலைவர் திருச்சிக்கு வந்திருக்கிறார். தளபதி இளைஞரணி செயலாளராக இருந்த போதும் சரி, துணை முதல்வராக இருந்தபோதும் சரி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சரி இப்படி ஒவ்வொரு முறையும் திருச்சிக்கு வந்து வளர்ச்சிக்கு பல்வேறு முக்கிய பங்காற்றி இருக்கின்றார்கள். இவ்வாறு திருச்சியின் வளர்ச்சிக்கு தலைவரும் தளபதியும் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் சொன்னார்கள் திருச்சி இரண்டாவது தலைநகராக அறிவிக்க தேவை இல்லை, ஆனாலும் பணியை அதிக்கப்படுத்தி செய்யுங்கள் என்றார்….அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன் எப்பொழுது தளபதி பதவியேற்றாரோ அப்போதே பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. தொடங்கி இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த உலகம் தோன்றியதில் இருந்து திருச்சிக்கு 90 எம் எல் டி தண்ணீர் தான் வந்துகொண்டிருந்தது. ஆனால் 2006 – 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் பணியை மேற்கொண்டு கூடுதலாக 90 எம் எல் டி தண்ணீரைக் கொண்டு வந்தார். இப்படி திருச்சிக்கு 180 எம் எல் டி தண்ணீரை கொண்டு வந்தது தலைவர் கலைஞர் அவர்கள். மேலும் மணப்பாறைக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட்ட போது தண்ணீர் பிரச்சினையை சரி செய்து கொடுத்தவர் கலைஞர்.

இனிகோ இருதயராஜ் அவர் தொகுதிக்கு கோரிக்கைகளை வைத்தார். அப்துல் சமத் மணப்பாறைக்கு கோரிக்கைகளை வைத்தார். ஆனாலும் திருச்சியில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் முதல்வர் செய்து வருகிறார்.

நான் ஒன்றிரண்டை மட்டும் உங்களிடம் கூறுகிறேன், திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வர வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்று திருச்சி ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய இருக்கிறது. இதற்காக முதல்கட்டமாக 350 கோடி ரூபாயை தமிழக முதல்வர் வழங்கியிருக்கிறார். பிறகு அடுத்த கட்டம், அடுத்த கட்டம், அடுத்த கட்டம் என்று தொடர்ந்து அதிகப்படியான நிதியை தமிழக முதல்வர் வழங்குவார்கள்.

மேலும் அரை வட்ட சாலை சூலுரில் தொடங்கி, பஞ்சப்பூர் வழியாக, கம்பரசம்பேட்டை கடந்து, காவிரி, கொள்ளிடம் பகுதி வழியாக மண்ணச்சநல்லூர் சென்று பாவலூரை கடந்து கல்லணை வந்தடையும். கோரையாற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இப்படி பல திட்டங்கள் ரோடுகள், சாலைகள் என்று பல்வேறு திட்டங்களை தளபதி அவர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள்.

துறையூர் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் வனத்துறையிடம் உள்ள சாலை அமைக்க சொல்லியிருக்கிறார்கள். இப்படி குடிநீர் திட்டம், சாலைகள், கட்டிடங்கள் என்று அனைத்தையும் தருவதோடு திருச்சியில் அமைய உள்ள 1000 ஏக்கர் சிப்காட் வளாகத்தில் பல்வேறு பணிகள் தொடங்க பட இருக்கிறது. மேலும் ஒவ்வொரு அமைச்சர்கள் இதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இதனால் திருச்சி சுற்றியுள்ள 45 தொகுதிகளில் 4 தொகுதிகள் மட்டும்தான் நம்மிடம் இல்லை, 41 தொகுதிகள் நம்மிடம்தான் இருக்கிறது. மேலும் திருச்சியை சுற்றி உள்ள 70 தொகுதிகளிலும் திருச்சியின் உடைய தாக்கம் வரும் என்றும்…… எங்களுடைய தளபதி வாழ்க என்று சொல்கிறார்கள், எங்களுடைய முதல்வர் வாழ்க என்று சொல்கிறார்கள், ஐ லவ் யூ தலைவர் என்று சொல்கிறார்கள், அதோடு மட்டுமல்லாமல் வருங்கால பிரதமர் வாழ்க என்றும் சொல்கிறார்கள் இதனால் நீங்கள் விரும்புகிற வரை உங்களுடைய ஆட்சி தமிழ் நாட்டில் இருக்கும். இதற்கு தமிழ் நாட்டின் மத்திய பகுதி முக்கிய அங்கமாக உங்களோடு இருக்கும்.

எங்களை பொறுப்பாக போட்டு இருக்கக்கூடிய சேலத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் ஒரு சட்டமன்ற தொகுதி நம்மிடம் இருக்கிறது. 20 ஊராட்சி ஒன்றியங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். 1 மாவட்ட ஊராட்சியை அவர்களைத் இருக்கிறார்கள். இப்படி இருக்க கூடிய சேலத்தில் வரக்கூடிய தேர்தலில் 31 பேரூராட்சி, 7 நகராட்சி,1 மாநகராட்சி என்று அனைத்திலும் 100 சதவீத வெற்றியை பெறுவோம்….மேலும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று கூறி உரையை முடித்தார் அமைச்சர் கே என் நேரு.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.