திருச்சி போலீசை கலங்கடித்த ஜெகஜால திருடன்
திருச்சி போலீசை கலங்கடித்த ஜெகஜால திருடன்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரமங்கலம் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன் கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சொந்த ஊரான சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் இருந்து திருமணமானதற்கு பின் திருச்சியை பூர்விகமாக கொண்டு வசித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக்கேயனின் தம்பி கோகுல் (வயது -18), என்பவன் சேலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், திருச்சியில் உள்ள தனது அண்ணன் கார்த்திக்கேயன் வீட்டில் வந்து கடந்து 6 மாதத்திற்கு முன் தஞ்சமடைகிறான். இங்கு வந்து சில நாட்கள் அமைதியாக இருப்பது போல், தனது அண்ணன் வீட்டில் உள்ள ஸ்கூட்டி பைக்கை எடுத்துக் கொண்டு மாத்தூர், குண்டூர் பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட ஆரம்பித்துள்ளான்.
பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மாத்தூர் பகுதியில் உள்ள மூன்று பைக்குகளை அசால்ட்டாக திருடுகிறான். இதுகுறித்து போலீசார் விசாரணை ஆரம்பிக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது அதில் புதிய முகமாக இருந்ததால் போலீசாரே கொஞ்சம் பொறுத்து பிடிப்பதற்கு பின் வாங்கியுள்ளனர்.
ஆனால் அதற்கு மறுவாரமே கோகுல் மாத்தூரில் உள்ள பூட்டி கிடந்த வீட்டினை உடைத்து திருட முயற்சி செய்தபோது, மாடியில் குடியிருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டதில் தான் வந்த ஸ்கூட்டியை விட்டுவிட்டு ஓடியுள்ளான். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீசார் ஸ்கூட்டியை வைத்து விசாரத்ததில் குமாரமங்கலத்தை சேர்ந்த கார்த்திகேயனுடையது என்பது தெரிய வந்தது. அதன்பின் 2021 டிசம்பர் -10 ஆம் தேதி கோகுலின் அண்ணன் கார்த்திக்கேயனை போலீசார் விசாரித்ததில் நானும் என் மனைவியும் வெளியூர் சென்றுவிட்டோம் நாங்கள் இல்லாத நேரத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான்.
அவன் திருட்டு வேலைகளில் ஈடுபடுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, தானே அவனை விசாரணைக்கு அழைத்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் கோகுலைப் பற்றி நவல்பட்டு போலீசார் சேலம் மாநகர காவல் நிலையத்தில் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கோகுல் மீது சேலத்தில் 3 திருட்டு வழக்குகள் இருப்பதாகவும்,
இதுக்குறித்து விசாரணைக்கு அழைத்து வந்தால் வரும் வழியிலேயே எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டு வந்ததாக போலீசாரே பீதியடையும் வகையில் டஃப் குடுப்பானாம் இதனாலயே இவன் மீது இருக்கும் குற்ற சம்பவங்கள் அனைத்தும் விசாரிப்பதற்கு சேலம் போலீஸ் தயக்கம் காட்டுவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று 2022 ஜனவரி 4 காலை 11 மணியளவில் கார்த்திகேயன் சேலத்திலிருந்த கோகுலை நவல்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். எஸ்.ஐ சதீக்ஷ்குமார் கோகுலை விசாரித்து கொண்டிருக்க, தீடீரென பந்தகோக்ஷ் என்று கிளம்பி போயுள்ளார்.
பின்னர் க்ரைம் போலீசார் விசாரிக்க சென்ற போது திடீரென முசிறி அருகே வரும்போது எலி பேஸ்ட் சாப்பிட்டதாக கூறியுள்ளான். உடனே பீதிகுள்ளான போலீசார் அவனது அண்ணனை விட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை முயற்சி என்பதால் மருத்துவமனைக்கு விசாரணைக்கு வந்த போலீசாரிடம் தன்னை தான் செய்யாத குற்றத்தை ஒத்துக்க சொல்லி போலீஸ் டார்ச்சல் செய்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்ட்தாக கூறியுள்ளான்.
இதுகுறித்து நவல்பட்டு போலீசாரிடம் பேசினோம்..
காவல் நிலையத்தில் அவன நாங்க விசாரிக்கவே இல்ல, எல்லா போலீசாரும் ரொம்பவே பிசியாக இருந்தாங்க, அதுவும் இல்லாம ஸ்டேசன் ல அவன் வந்ததுல இருந்து என்னா பண்ணினான், யாருட்ட பேசுனான் முதற்கொண்டு வீடியோ, ஆடியோ பதிவு இருக்கு, அவன யாரும் விசாரிக்கவே இல்ல அவன பத்தி ஏற்கனவே எங்களுக்கு தெரிஞ்சதுதான். இவன் செஞ்ச க்ரைம் எல்லாமே வீடியோவோட இருக்கு இதுல பொய் சொல்லனும்னு அவசியமே இல்ல, இவன விசாரிச்சா 50 பவுன் மீட்கலாம் ஆனா இப்படி போலீச பயமுறுத்துர மாதிரி எல்லா குற்றவாளிகளும் வந்த எங்களால என்ன பண்ண முடியும்னு புலம்பினர்.
-இந்தர்ஜித்