இப்படி தான் ஏமாற்றுகிறார்கள் தில்லாலங்கடி பெண்கள் ! உஷார் வியாபாரிகளே?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இப்படி தான் ஏமாற்றுகிறார்கள் தில்லாலங்கடி பெண்கள் ! உஷார் வியாபாரிகளே?

 

திருச்சியில் சமீபகாலமாக நூதன திருட்டு சம்பவம் என்பது ஆங்காங்கே தலை தூக்கிய வண்ணம் இருந்து வருகிறது. ஆனால் காவல் துறை இதனை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை.

Srirangam MLA palaniyandi birthday

ஏனெனில் ஒரு நாளைக்கு இதுபோன்ற புகார்கள்  பல  நிலையம் வந்து எட்டிப்பார்ப்பதால் காவல்துறை இதனை கணக்கிலேயே வைத்து கொள்வதில்லை என்கின்றனர் விவரம் அறிந்த போலீசார்.

அப்படி ஒரு சில வழக்குகளை கையில் எடுத்து ஆக்ஸன் காட்டினாலும், இக்கும்பல் காவல்துறை கண்ணிலேயே பொடியை தூவி விட்டுட்டு தனது தில்லாலங்கடி தனத்தை  செய்து கொண்டுதான் வருகிறது.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்நிலையில் நேற்று 2022 ஜனவரி 19 ம்தேதி திருவானைக்காவல் மெயின்ரோட்டில் மாலை 7.00 மணியளவில் மூன்று பெண்கள் அங்குள்ள மெடிக்கல் ஒன்றில் 2000 ரூபாய் தாளை கொடுத்து தலைவலி மாத்திரை  கேட்டுள்ளனர். மெடிக்கலில் இருந்த பெண் சில்லரை இல்லை என்று கூறியுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தைக்கு பால் போடும் டப்பா கேட்டுள்ளனர்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

மெடிக்கலில் இருந்த பெண்ணும் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்களது கையில் மூன்று 500 ரூபாய் தாள்களும், நான்கு 100 ரூபாய் தாள்களும் பாக்கியை முதலில் கொடுத்துவிட்டு, அதன்பிறகு மருந்துக்களை வழங்கியுள்ளார்.

உடனே அப்பெண்கள் மீதி பணம் குறைவாக இருக்கிறது ஒன்னு மீதி பணத்தை கொடு, இல்லைன்னா நாங்க கொடுத்த 2000 ரூபாயை கொடு என்று சத்தமிட்டு பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பக்கத்தில் உள்ள கடைகாரர்  அந்த பெண்களை கடையை விட்டு கீழே இறங்க கூறியுள்ளார்.

ஆனால் அதில் ஒரேஒரு பெண் மட்டும் நகராமல் ஒரே இடத்தில் நிற்பதை பார்த்து சந்தேகத்தில் அந்த பெண்ணினை தள்ளியதில் தனது காலடியில் செறுப்பால் பணத்தை மறைத்து வைத்து நாடகமாடியது தெரியவந்தது.

இதுப்போன்றே திருவானைக்காவல் பகுதியில் உள்ள டூவீலர் ஸ்பேர்பார்ட்ஸ் கடையில் இன்ஜின் ஆயில் வாங்குவதுபோல் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. பின்னர் கடைகாரர் அவசர எண் 100 க்கு தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் பெட்ரோல் வாகன போலீசார் அந்த மூன்று பெண்களையும் விசாரித்ததில் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதன்பின் போலீஸ் வழக்கம் போல் தங்களது ஸ்டைலில் லெஃப்ட், ரெய்ட் வாங்கியதில் தங்களது ஊர் விழுப்புரம் என்றும், இங்கு ஊசி மணி, பாசி மணி விற்க வந்ததாகவும் காவிரி பாலத்தில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர்.

பின்னர் அந்த மூன்று பேரில் ஒரு பெண் நிறைமாத கர்ப்பினியாக இருந்ததால், போலீசார் கண்டித்து அனுப்பியுள்ளனர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.