அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘29’      

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம்  & ஜி ஸ்குவாட் லோகேஷ் கனகராஜ். எழுத்து-இயக்கம் : ரத்ன குமார். ஆர்ட்டிஸ்ட் : விது, ப்ரீத்தி அஸ்ராணி, அவினாஷ், மணி, ஆதிரா பாண்டிலட்சுமி, ஆறுமுகவேல், கிரண்,  சிந்து ஷ்யாம், பிரேம்குமார், ஷெகான்ஸ் ஃபாத்திமா, ஷாலினி, பிரியங்கா, அனுஸ்ரீ வேலன். ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : ஆர்.எஸ்.சதீஷ்குமார், பி.ஆர்.ஓ. : ’எஸ்-2’ சதீஷ்.

பி.எஸ்.சி.[அக்ரி] படித்துவிட்டு ஊரில்[சேலம்] அம்மா [ஆதிரா பாண்டிலட்சுமி] அப்பா [ ஆறுமுகவேல்]வுடன் சேர்ந்து விவசாயம் பார்க்கிறார் சத்யா [ விது]. அங்கே ஆளாளுக்கு சாதிப் பெருமை, குலப்பெருமை, மதப்பெருமை பேசுவதால் எரிச்சலாகி, தான் யார் என்பதற்கான விடைதேடி 29 வயதில் சென்னைக்கு வந்து ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் சத்யா. அங்கே எதேச்சையான ஒரு சந்திப்பில் விஜி[ப்ரீத்தி அஸ்ராணி]யைச் சந்திக்கிறார், லவ்வில் விழுகிறார். தனக்கு விவரம் தெரியாத வயதிலேயே தனது அப்பா ஓடிபோய்விட்டதால் அம்மாவின் அரவணைப்பில் வளரும் விஜிக்கு ஐஏஎஸ். ஆகவேண்டும் என்பது லட்சியம். தான் யார் என சத்யாவுக்கு தெரிந்ததா? விஜி ஐஏஎஸ் ஆனாரா? இரண்டே கால் மணி நேரம் நடக்கும் உணர்வுப்போராட்டம் தான் இந்த ‘29’.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

‘29’   movie 
‘29’   movie

எழுதி இயக்கிய ரத்னகுமாருக்குத் தான் முதலில் மனம் நிறைந்த பாராட்டுக்களைச் சொல்ல வேண்டும். படம் முழுக்க வசன வீச்சுகளால் நம்மை வசீகரிக்க வைத்துவிட்டார். ஊரில் சாதிப் பெருமை பேசும் மீசைவச்ச பெருசு ஒன்றிடம் “நானே அந்த சனியனை தூக்கிப் போடலாம்னூ தான்யா பார்க்குறேன்”, மதப் பெருமை பேசும் சாமியாரிடம் “இந்த செருப்பு வெளியில கிடக்குறத வச்சுதாண்டா நானே கோவிலுக்குள்ள போலாமா? வேண்டாமான்னு முடிவு பண்ணப் போறேன்” என விது பேசும் சாட்டையடி வசனங்களாகட்டும், ப்ரீத்தி   அஸ்ராணியை விது வர்ணிக்கும் போது சொல்லும் ‘திருப்பிப் போட்ட திருக்குறள்” ஹைக்கூ ரசனை.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

படுக்கையில் விதுவுடன் இருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி, “தொட்டு தாலி கட்டுனா என்ன? தொட்டுட்டு தாலி கட்னா என்ன?” ”ஒரு ஆணையும் பெண்ணையும் ரொமாண்டிக்சேஸன் பண்ணிப் பண்ணி, அவர்கள் முன்னால் இருக்கும் பெரிய பெரிய லட்சியங்களையெல்லாம் மழுங்கடிக்கச் செய்துவிட்டார்கள்” இப்படி படம் முழுக்க ரத்னகுமாரின் ரத்ன வரிகள், வசனங்களாக வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. சபாஷ் ரத்னகுமார்.

அதே போல் ஹீரோ விது  கேரக்டரை ஊரில் உள்ள ஏரியைத் தூர்வாரும் சமூகப்போராளியாகவும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையார் ஊர்வலத்தை எதிர்க்கும் மனிதம் பேசும் மனிதனாகவும் ஏரியை ஆக்கிரமித்த கட்டப்பட்ட் தனியார் கல்லூரிக்குச் சமாதிகட்டும் முன்கள வீரனாகவும் கட்டமைத்து இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல சிந்தனையூட்டியதற்காகவும் ரத்னகுமாருக்கு ரத்னக்கம்பளம் விரித்து பெருமைப்படுத்தலாம்.

சத்யாவாக விது… சும்மா சொல்லக்கூடாது ரொம்பவும் அசாத்தியமான நடிப்பைக் கொடுத்து அசத்திவிட்டார். 29 வயசு வரைக்கும் ஒருத்தன் கல்யாணம் ஆகாம இருக்குறதுக்கான காரணத்தைச் சொல்லி கலங்குவதாகட்டும், ப்ரீத்திய லவ் பண்ண ஆரம்பித்ததும் அவருக்குள் ஏற்படும் எல்லா ரசாயன மாற்றங்களையும் உணர்ச்சிகளையும் மிக ஆழமாக திரையில் கொண்டு வந்துவிட்டார் விது. முதல் பாதியில் லேசான தாடியுடன் தனுஷையும் பின்பாதியில் அடர்த்தியான தாடியுடன் மாதவனையும் நினைவுபடுத்துகிறார் விது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ப்ரீத்தி அஸ்ராணி….. இந்த சின்னப் பொண்ணு இன்னும் இன்னும் உயரத்திற்குப் போவார், போகணும்.  அம்புட்டு நடிப்புத் திறமை அவருக்குள் கொட்டிக்கிடக்கு. “ஏதாவது ஒரு ஆம்பிஷனை நோக்கி முன்னேறுடா” என விதுவை மோட்டிவேட் பண்ணுவது, ஐஏஎஸ் லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்பது, ஓடிப்போன தனது அப்பா  குறுநில கதிரவன்[பிரேம்குமார்] தன் காலில் விழுந்து கதறும் போது, அவரைத் தோள் தொட்டுத் தூக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு… இதெல்லாம் சின்ன சாம்பிள் தான். விதுவுடனான நெருக்கமான காட்சிகளில் கூட எல்லை மீறாமல் நடித்து நம மன எல்லைக்குள் ஸ்ட்ராங்காக உட்கார்ந்துவிட்டார் ப்ரீத்தி அஸ்ராணி. பீச்சில் விதுவுக்கும் ப்ரீத்திக்கும் இடையிலான எட்டு நிமிட சீன் அற்புதம் பேசும் ஆனந்த சீன்.

‘29’   movie விதுவின் ரூம்மேட்டாக அவினாஷ், கல்லூரி அதிபரின் மகனாக மாஸ்டர் மகேந்திரன், விதுவின் அம்மாவாக ஆதிரா பாண்டிலட்சுமி, அப்பாவாக ஆறுமுகவேல், ப்ரீத்தியின் அம்மாவாக சிந்து ஷ்யாம் என எல்லா கேரக்டர்களுமே கவனம் ஈர்க்கிறார்கள். நான்கு சீன்கள் தான் என்றாலும் மனதில் நச்சென பதிகிறார் கலெக்டராக வரும் அனுஸ்ரீவேலன்.

படத்தின் ஆதார ஸ்ருதியே மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் தான். சின்னசின்னப் பாடல்கள், பின்னணி இசையால் படம் முழுக்க ஃபீலிங்குடன் நம்மை பயணிக்க வைக்கிறார். அதற்கடுத்து கேமராமேன் மாதேஷ் மாணிக்கம் தான். குறிப்பாக இரண்டு மூன்று மழைக்காட்சிகளில் இவரின் லைட்டிங் பிரசண்டேஷன் சிலிர்க்க வைக்கிறது.

எல்லா சரி டைரக்டரே…. இடைவேளைவிடும் நேரத்தில் அந்த ஜக்கம்மா ஜோசியக்கார பொம்பளையை வம்படியாக  உள்ளே கொண்டு வந்து…அதுக்கான காரணத்தைச் சொல்ல முடியாம எஸ்கேப்பாகிட்டீகளே? அதே போல் டெல்லியில் ப்ரீத்தியுடன் வசிக்கும் அவரது அம்மா சிந்து ஷ்யாம், சேலத்துக்கு வந்து ஆஸ்பத்திரியில் விதுவைப் பார்த்துவிட்டு, “கோவிலுக்குப் போய்ட்டு வர்றேன்னு அவகிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்” எனச் சொன்னதைக் கேட்டு பகீர்னு ஆகிப்போச்சு. டெல்லியிலிருந்து அரியானாவுக்கு போய்ட்டு வந்தாலே ரெண்டு நாள் ஆகும். நீங்க என்னமோ ரெண்டு மணி நேரத்துல சேலத்துக்குப் போய்ட்டு வர்ற மாதிரி சொல்றீக. ரொம்பவே ஸ்லிப்பாகிட்டீகளே ரத்னகுமார்.

மற்றபடி இந்த ‘29’ எல்லா வயதினருக்கும் ஏற்றபடம், நம்பிக்கை தரும் நல்ல படம்.

அங்குசம் பார்வையில் ‘29’       65/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.