Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சியில் தமுமுக 29 வது ஆண்டு தொடக்க விழா நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 29 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் 25.08.2023 காலை தென்னூர் ஹைரோடு மேம்பாலம் அருகில் தமுமுக கொடி ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி த.மு.மு.க மாவட்ட தலைவர் அ . பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது.
ம.ம.க பொது செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப . அப்துல் சமது MLA கழக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி நூற்றுக்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மாநில அணிகளின் துணை செயலாளர்கள் முகமது ரபீக், பிரேம் நசீர், அப்பீஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்கா அப்துல் சமது, ஹுமாயூன் கபீர், அப்துல் ரஹ்மான், இம்ரான், அசாருதீன், அப்துல் சமது மற்றும் தென்னூர் பகுதி நிர்வாகிகள் ஜபார் அலி, தென்னூர் சதாம், அப்பாஸ், இஷாக், உஸ்மான், பக்ருதீன், ஜமால்,நியாஸ், சார்லஸ், நிசார் உள்ளிட்ட மாவட்ட அணிகளின் செயலாளர்கள், பகுதி, வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.