ஜெயிலர் நடிகையின் மேரேஜ் சீட்டிங் கதறும் கணவன்!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

ஜெயிலர் நடிகையின் மேரேஜ் சீட்டிங் கதறும் கணவன்!

கேரளாவைச் சேர்ந்த அதிதி மேனன் ‘பட்டதாரி’ என்ற படம் மூலம் அபி சரவணனுக்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அப்போதே இருவரும் லவ்’வில் விழுந்து ஜவ்’வாக இழுக்காமல் உடனடியாக கல்யாணமும் பண்ணிக் கொண்டனர். ஆஃப்டர் மேரேஜ் களவாணி-2′ படத்தில் கமிட்டாகி, சில சீன்களில் கிளாமரிலும் தூள் கிளப்பினார். அதன் பின் மலையாளத்தில் மோகன்லால் நடித்த “பிக்பிரகர்” படத்தில் நடிக்கும் போது மிர்னா மேனன் என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

இதன் பின் இவருக்கு “நட்பு“ வட்டம் பெரிதானதால் பழக்க வழக்கமும் மாறியது. அபி சரவணன் அவுட்டோர் ஷூட்டிங் போய் விட்டால் மிர்னாவுக்கு செம குஷிதான். இரண்டு வருடங்கள் அபிசரவணனுடன் குடும்பம் நடத்திய மிர்னா திடீரென ஒரு நாள் சொந்த வீட்டிலிருந்த பொருட்களையும் பணம், நகைகளையும் அபேஸ் பண்ணிவிட்டு கேரளாவுக்கு கம்பி நீட்டிவிட்டார். அவுட்டோர் ஷூட்டிங்கிலிருந்து திரும்பிய அபி வீடு சூறையாடப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியானார். கேரளாவுக்குப் போனார், கெஞ்சிக் கூத்தாடி பஞ்சாயத்துப் பண்ணிப் பார்த்தார், எதற்கும் மசியவில்லை மிர்னா. அவரது அப்பாவும் அம்மாவும் மசியவிடவில்லை.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

5

அபிக்கு சொந்த ஊர் மதுரை என்பதால் அங்கேயிருக்கும் கோர்ட்டில் கேஸ் போட்டார். தனக்கும் அதிதிக்கும் நடந்த திருமண சான்றிதழ், போட்டோக்களை ஆதாரமாக சமர்ப்பித்து, தன்னுடன் அதிதியை சேர்த்து வைக்கும்படி மன்றாடினார். ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணை நடந்து முடிந்து, அபியுடன் சேர்ந்து வாழும்படி கோர்ட் உத்தரவிட்டது. இப்போது வரை கோர்ட் உத்தரவுக்கே பெப்பே காட்டிவ ருகிறார் மிர்னா மேனன். கதறிக் கொண்டி ருக்கிறார் இப்போது விஜய் விஷ்வாவாக மாறியியிருக்கும் அபி சரவணன்.

லேட்டஸ்டாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் “ஜெயிலர்” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த பின்மிர்னாவின் மினுக்கும் மிடுக்கும் கூடிப் போச்சு.

7
– மதுரை மாறன் படங்கள்: எஸ். பி. சுந்தர்
6
Leave A Reply

Your email address will not be published.