அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“பிரேமலு போல ‘2கே லவ் ஸ்டோரி’ யும் ஹிட்டாகும்” –டைரக்டர் சுசீந்திரன் நம்பிக்கை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சிட்டி லைட் பிக்சர்ஸ்’  தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள படம்   ‘2K லவ்ஸ்டோரி’.  தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜனவரி 22-ஆம் தேதி சென்னையில் நடந்தது.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்நிகழ்வில் பங்கேற்று பேசியவர்கள்….

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன்…

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

“இது எங்களின் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி.சுசீந்திரன் இல்லாமல் இந்தப்படம் இல்லை. மிக அட்டகாசமாகபடத்தை எடுத்துள்ளார்.  இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக  அறிமுகமாகிறார். மீனாட்சி நன்றாக நடித்துள்ளார்.  படம் மிக அருமையாக வந்துள்ளது.  இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்”.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா

“சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை. இப்போது இப்படத்தில்  பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார்.ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார்.படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையட்டும்”.

நடிகை லத்திகா…

” நீங்கள் டிக்கெட்டுக்கு கொடுத்த காசு வீணாகாது. நான் இந்தப்படத்தில் மிக நல்ல ரோலில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் தந்த அம்மா அப்பாவுக்கு நன்றி”.

வினோதினி வைத்தியநாதன் “இந்தப்படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் மிக நல்ல கதாப்பாத்திரம். சுசீந்திரன் சார், காதலைக் கையாள்வதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும். இளமையாக இனிமையாக இப்படத்தில் காதலைக் காட்டியுள்ளார்.கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும்”.

'2K லவ்ஸ்டோரி'இயக்குநர் &நடிகர் பாக்யராஜ் கண்ணன்

“சுசி சார் ஒரு நாள் போன் செய்து பிரதர் ஃப்ரீயா இருந்தால்,  நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார்.படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். இந்தப்படம் தனஞ்செயன் சார் கைக்குப் போய் விட்டது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது”.

நடிகர் பாலசரவணன்

“எனக்கு இந்த அருமையான படத்தில் வாய்ப்பு தந்த, சுசீந்திரன் சாருக்கு நன்றி. 2கே லவ் ஸ்டோரி படத்தில் எனக்கு என்ன வேலை என என் வீட்டிலும் கேட்டார்கள், நான் 2கே கிட்டாக நடிக்கிறேன் என சொல்லவே இல்லை. இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமென நான் நினைக்கவே இல்லை.  நாயகன் ஜெகவீர் இப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் “.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகர் அருள்தாஸ்

“தம்பி சுசி தான் இந்த மேடைக்கு நான்வரக்காரணம். நான் நடிகனானது நான் மகான் அல்ல படத்தில் தான். என் பொருளாதாரம் உயர்ந்து, இந்த நிலைக்கு நல்ல நடிகனாக வரக் காரணம் சுசீந்திரன் தான். சுசி எப்போது கூப்பிட்டாலும், எத்தனை சின்ன பாத்திரம் என்றாலும் நான் போய் விடுவேன். சுசிக்கு தொழில் சுத்தமாகத் தெரியும். அவர்  மிகத் திறமைசாலி, அதனால் தான் அவனால் இத்தனை சீக்கிரம் படத்தை முடிக்க முடிகிறது. அனைவருக்கும் இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையட்டும்”.

'2K லவ்ஸ்டோரி'நடிகை திவ்யா துரைசாமி

“என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசி சார் தான். அவருக்காகத் தான் இந்த விழாவிற்கு வந்தேன். எதற்காகவும் கோபப்பட மாட்டார், மிகவும்  அன்பாக இருப்பார். எப்போதும் ஒரே மாதிரி இருப்பார்”.

இயக்குநர் எழில்

” இத்தனை நடிகர்களை வைத்து சுசீந்திரன் எப்படி இதை எடுத்தார்? என ஆச்சரியமாக உள்ளது.  2கே கிட்ஸை  வைத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்கிற ஆவலும் உள்ளது. இன்றைய இளைஞர்களின் உலகம் புதிதாக இருக்கிறது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் உலகத்திற்குள் நுழைந்து, அடுத்த கட்டத்திற்கு ஒரு படத்தைச் செய்துள்ளார் சுசீந்திரன். நடிகர்கள் எல்லோரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்”.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஹீரோயின் மீனாட்சி கோவிந்தராஜன்

“இத்தனை பேருக்கு வாய்ப்பும், வாழ்க்கையும் தந்த சுசி சாருக்கு நன்றி.படம் மிக அழகான படமாக, அருமையான படைப்பாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் “.

'2K லவ்ஸ்டோரி'அறிமுக நாயகன் ஜெகவீர்

“இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்கு இமான் சார்  இசையமைப்பது மகிழ்ச்சி. சுசி சார், இமான் சார், நல்ல கலைஞர்கள் என்பதைத் தாண்டி, நல்ல மனிதர்கள். இப்படம் தனஞ்செயன் சாரிடம் சென்றிருப்பது மகிழ்ச்சி. படத்தில் உடன் நடித்த பாலசரவணன், மீனாட்சி எல்லோரும் ஆதரவாக இருந்தார்கள்.  மிக நல்ல படைப்பாக வந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி உங்கள் லவ்வரோடு போய்ப் பாருங்கள்”.

இசையமைப்பாளர் டி.இமான்

“சுசி சாரின் நல்ல மனதிற்கும், புதிய முயற்சிக்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். சுசி சாருடன் இது எனக்கு 9வது படம். சுசி சார் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானரில் அசத்துவார். இந்தப்படத்தில் 2கே கிட்ஸ் உலகத்தை மிக இயல்பாக அழகாகக் காட்டியுள்ளார். எல்லோரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும். இந்த தலைமுறை இளைஞர்களிடம் உரையாடி, அவர்களின் உலகைக் காட்சிப்படுத்தியுள்ளார்.  இப்படத்தின் இசை முதல் முறையாக என் ஆடியோ லேபிள் நிறுவனம் மூலம் வருவது மகிழ்ச்சி. அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள் “.

தயாரிப்பாளர் தனஞ்செயன்

“வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சுசீந்திரன் னுடன் இணைய வேண்டியது மிஸ் ஆகிவிட்டது. ஆனால் இதில் மிஸ் ஆகிவிடக்கூடாது என்பதால்  நான் ரிலீஸ் செய்கிறேன் என்றேன். படத்தின் இரண்டாம் பாதியில் எனக்கு சில காட்சிகளில் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் அதைச் சொல்லத் தயங்கினேன். ஆனால் சுசி சார் அதை நான் மாற்றி விட்டேன் என்றார். என் கருத்துக்களுக்கு  மதிப்பு தந்தார். பல இயக்குநர்கள் என் படத்தில் கருத்துச் சொல்ல நீ யார்?, என் படத்தை அப்படியே ரிலீஸ் செய்வது என்றால், செய்! என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லாமல்,   நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக படத்தின் காட்சிகளை மாற்றியமைத்த சுசீந்திரன் சாருக்காக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.  இந்தப் படத்தில் அனைத்து நடிகர்களுமே மிக அற்புதமாக நடித்துள்ளார்கள்.  தயாரிப்பாளர் மிகச் சிறப்பாகப் படத்தைத் தயாரித்துள்ளார்.இந்த இளமையான டீம் சொல்ல வரும் கருத்து, அனைவருக்கும்  பிடிக்கும் “.

இயக்குநர் சுசீந்திரன்

'2K லவ்ஸ்டோரி'” 2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம்.  தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம். அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கும் என்னை வாழ்த்த எனக்காக வந்த  எழில் சார், அருள் தாஸ் ஆகியோருக்கும் நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ‘பிரேமலு’  ரிலீசான அன்று யாருக்கும் தெரியாது. அடுத்த ஷோவில் இருந்து உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக் ஷென் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும்”.

தொழில் நுட்பக் குழு;

ஒளிப்பதிவு : வி.எஸ்.ஆனந்த  கிருஷ்ணன்

இசை – டி.இமான்

பாடல்கள்:  கார்த்திக் நேதா

எடிட்டர் – தியாகு

கலை – சுரேஷ் பழனிவேலு

நடனம் – ஷோபி, பால்ராஜ்

பி.ஆர்.ஓ – சதீஷ் (AIM)

ஆடை வடிவமைப்பாளர் – மீரா

போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக்

தயாரிப்பு நிர்வாகி -டி. முருகேசன்

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.