இந்திய சினிமாவை புரட்டிப் போடுமா ‘2K லவ் ஸ்டோரி’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிட்டி லைட் பிக்சர்ஸ்’ விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள படம்   ‘2K லவ்ஸ்டோரி’.

வரும்  14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா  பிப்ரவரி 07–ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள்…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இயக்குநர் திரு

“இந்தப் படம் பற்றி தனஞ்செயன் என்னிடம் சொன்னார், முழுக் கதையும் அவர் அவ்வளவு ரசித்துச் சொன்னார். அந்த அளவு இந்தத் திரைப்படம் அவரை பாதித்திருக்கிறது. அவரே சொன்ன பிறகு நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்”.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

'2K லவ் ஸ்டோரி'இயக்குநர் செல்லா அய்யாவு

“இந்தப் படத்தில் 2K கிட்ஸ் பசங்களின் கதையைச் சொல்லி இருக்கிறார் சுசீந்திரன் . இந்தக் கால இளைஞர்களின் வாழ்க்கையை, அவர்கள் ரிலேஷன்ஷிப்பை, அவர்கள் வாழ்க்கையை அணுகும் விதத்தை, அவர்கள் எப்படி சரியாக இருக்கிறார்கள் என்பதை, மிக அழகான கதையாகக் கோர்த்து, இந்த படத்தில் சொல்லி இருக்கிறார். முந்தைய ஜெனரேஷன் இந்த தலைமுறையைப் பார்த்து தவறாக நினைப்பார்கள், ஆனால் அதெல்லாம் இல்லை என்று  மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. படம் மிக சூப்பராக வந்திருக்கிறது, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

” சுசீந்திரன் நடிகர்களைக் கையாளும் விதம், எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில்  நடிகர்கள் நடிப்பது மாதிரியே தெரியாது, அவ்வளவு அருமையாக அவர்களைக் கையாளுவார்.  பல விஷயங்களில் அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். எப்போதும் அடுத்த தலைமுறை  பற்றி நமக்குப் பெரிய அளவில் தெரியாது. ஆனால் இவர் 2K கிட்ஸ் வாழ்க்கையை மிக அற்புதமாகக் கையாண்டிருக்கிறார். படம் சூப்பராக வந்துள்ளது, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்”..

இயக்குநர் ஹரிஹரன்

“என்னுடைய ‘ஜோ’ படம் வந்தபோது, இரண்டு நாள் கழித்து ஒரு ஷோ போட்டு இருந்தோம். அப்போது படத்தின் இயக்குநர் யார் என்று விசாரித்து, என்னைத் தேடி வந்து கட்டியணைத்துப் பாராட்டினார் சுசீந்திரன் . அப்போதிருந்தே சுசீந்திரன் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.இந்த படத்தின் ஆரம்பத்திலிருந்து  ஃபாலோ செய்து வருகிறேன். என் படத்தில் நடித்த கவின் அண்ணா அவர்கள் இந்த படத்திலும் நடித்துள்ளார். அவர் படம் பற்றிச் சிலாகித்துச் சொல்வார். படத்தை நான் பார்த்தேன் . ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகச் சரியாக முடிப்பதில் சுசீந்திரன் சார் வல்லவர். ஆதலால் காதல் செய்வீர் போன்ற அட்டகாசமான படங்களைத் தந்தவர். இந்தப் படத்திலும் மிக அழுத்தமான ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இயக்குநர் எஸ் .ஆர். பிரபாகரன்

“இந்த தலைமுறைக்கு மிகவும் பிடித்த டைட்டில் இது. இது அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் ஒரு நல்ல படமாக இருக்கும்.  இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் மிக அற்புதமாக இருக்கு. அந்த சோஷியல் மெசேஜ், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விழாவின் நாயகன் இமான் சார், இந்த படத்தில் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இமான் சாரும் பிரபு சாலமன் சாரும் சேரும்போது, பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய ஹிட் அடிக்கும்.

'2K லவ் ஸ்டோரி'அதே போல தான் சுசீந்திரன்  இமான்  கூட்டணி சேரும்போதும்.  இருவரின் காம்போ இன்னும் மிகப்பெரிய வெற்றிகளைத் தர வேண்டும்.  நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் எனச் சொல்வார்கள். சுசீந்திரன்  அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷால், சூரி என இருவரும் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள். அதே போல இடம் உங்களுக்கும் கிடைக்கும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்”.

இயக்குநர் பிரபு சாலமன்

“இன்றைய தலைமுறையைப் பற்றி மிக அழுத்தமான ஒரு விஷயத்தை, மிகத் தைரியமாகப் பேசியிருக்கிறார் சுசீந்திரன். காதல் தாண்டி, நாயகனும் நாயகியும் நண்பர்களாக இருக்க முடியுமா? என்ற ஒரு விஷயத்தை இந்தப்படம் பேசுகிறது. இதை முன்பே எனது இயக்குநர் அகத்தியன் சார் தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்தில் பேசி இருந்தார். கதாநாயகியும் கதாநாயகனும்  சந்திக்காமலே ஒரு காதல் கதை எடுத்தார். அது இந்தியாவையே புரட்டிப் போட்டது. அதே போல் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்”.

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன்

“இது எங்கள் முதல்படம். சுசீந்திரன் சார் மீதுள்ள நம்பிக்கையில் தான் இப்படத்தை ஆரம்பித்தேன்.இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்”.

'2K லவ் ஸ்டோரி'இசையமைப்பாளர் இமான்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

” இத்தனை குறுகிய காலத்தில், ஒரு திரைப்படத்தை  திட்டமிட்டு, அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடிக்கக் கூடிய, ஒரே இயக்குநர் சுசீந்திரன் சார் மட்டுமே. அவர் உடலாலும், மனதாலும், பலத்தாலும் மிக நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் பல நண்பர்கள் உள்ளனர். அதில் நானும் ஒருவன்.  இப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன்

“திட்டமிடல் தான் சுசீந்திரனிடம் இருக்கும் சிறப்பு. ஒரு படத்தை எப்படி மிகக் குறுகிய காலத்தில் முடிக்க முடியும் என்பதை, அவரிடம் கற்றுக் கொள்ளலாம். ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, படத்தின் செலவினங்களை இழுத்து விட்டு, இறுதியில் படத்திலும் ஒன்றும் இல்லாமல், செலவையும் அதிகமாக்கிவிடும் இயக்குநர்கள் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் அதை உடைத்து திட்டமிடலில் சாதித்துக் காட்டுகிறார் சுசீந்திரன். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், சுசீந்திரன் சாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பீர்கள். ஒரு படத்தைத் தயாரிப்பது மிக எளிது, ஆனால் அதை வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடினம் அதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப்படம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்”.

இயக்குநர் சுசீந்திரன்

“வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது. இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமானுக்கும், அனைத்து நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள். இப்படத்தைத் தயாரித்திருக்கும் விக்னேஷுக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும்”.

'2K லவ் ஸ்டோரி'படத்தில் புதுமுக நாயகன் ஜெகவீருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி , இன்னும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் குழுவினர் :

இயக்கம் – சுசீந்திரன்

ஒளிப்பதிவு  -V.S.ஆனந்த கிருஷ்ணன்

இசை – டி.இமான்

பாடல்கள்.    – கார்த்திக் நேத்தா,

எடிட்டர் – தியாகு,

கலை – சுரேஷ் பழனிவேலு

நடனம் – ஷோபி, பால்ராஜ்

பி.ஆர்.ஓ – சதீஷ் (AIM)

ஆடை வடிவமைப்பாளர் – மீரா

போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக் ,

தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன்

 

— மதுரை மாறன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.