திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்கள் செய்யும் சிக்கலான மற்றும் நேரம் கவரும் பணிகளை தானாக செயல்படுத்த முடியும்!”

செயின்ட் ஜோசப் கல்லூரிக் கருத்தரங்கில் ஜமால் முகமது கல்லூரி முதல்வர் பெருமிதம் !

இனிய ரமலான் வாழ்த்துகள்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில் நுட்பத்திற்கான அண்மைகால முன்னேற்றங்கள் என்னும் பொருண்மையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவு கருந்தரங்கம்கல்லூரியின் அதிபர் தந்தை, செயலர் தந்தை,  முதல்வர் தந்தை ஆகியோரின் ஆசீரோடு நடைபெற்ற இக்கருத்தரங்கில் கல்லூரி இணை முதல்வர் முனைவர் பா. இராஜேந்திரன், துறைத்தலைவர் முனைவர் ஹென்றி லியோ காணிக்கம் மற்றும் முனைவர் ஜார்ஜ் தர்ம பிரகாஷ்ராஜ் பங்கேற்று தொடக்க விழா சிறப்புரையாற்றினர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தென்கொரியா கேங்சியோ பழ்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பெனடிக்ட் லாரன்ஸ் அவர்கள் கூரிய விண்வெனி வாணிலைக் கணிப்பு குறித்து தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 2025 ஆம் ஆண்டை நிர்ணயிக்கவிருக்கும் முக்கிய தொழில்நுட்ப போக்குகள் என்னும் தலைப்பில் சிங்கப்பூரில் இருந்து திரு விஜயராஜ் வீரமணி இணைய வழியில் பங்கேற்று தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

ஜெனரேடிவ் ஏஜன் பாதுகாப்பு குறித்த கேள்விகள் என்ற தலைப்பில் திரு. பொன்ஸ் முடிவை அருண், சிறந்த உலகத்திற்கான ஐஓடி (பொருட்களின் இணையம்) என்ற தலைப்பில் முனைவர் ஆ. திருநாவுக்கரசன் ஆகியோர் உரையாற்றினார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாலை நடைபெற்ற நிறைவுவிழாவில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமலரத்தினம் பங்கேற்று நிறைவுரையாற்றினார். செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்கள் செய்யும் சிக்கலான மற்றும் நேரம் கவரும் பணிகளை தானாக செயல்படுத்த முடியும் என்கிற கருத்தை மயமிட்டு அவர் உரை அமைந்திருந்தது.

செயற்கை நுண்ணறிவு கருந்தரங்கம்தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இடையிலான பாலமாக விளங்கிய இந்தக் கருத்தரங்கு எதிர்கால ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப பயணத்திற்கான திசைநோக்குகளை தெளிவுபடுத்தியது. இக்கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள், பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்கள் என 240 பேர் பங்கேற்று பயனடைந்தனர். நிறைவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

—       ஹென்றி லியோ காணிக்கம் & கரோல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.