ஒரே கல்லூரியில் அடுத்தடுத்து பலியான 3 மாணவர்கள் ! பெண் வழக்கறிஞரின் ஆபாச வீடியோ ! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!
பெண் வழக்கறிஞரின் ஆபா*ச வீடியோ ! ‘என் மகளாக இருந்தால்’ – நீதிபதி அதிரடி ! அங்குசம் ஆடுகளம் !
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் அடுத்தடுத்து பலியான சோகம் !
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவர் அபிஷேக், கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்பது உள்ளிட்டு அவரது தனிப்பட்ட சில சிக்கல்கள் குறித்து முறையிடுவதற்காக அந்த மாணவரது பெற்றோரை வரவழைத்திருக்கிறது விடுதி நிர்வாகம். இதனால் மனமுடைந்த அந்த மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அதே கல்லூரியில் பயின்று வந்த மற்றொரு மாணவர் திருச்சி தென்னூரை சேர்ந்த தனவீரன் மகன் பிரவீன், ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனை பெற்றோர்கள் கண்டித்திருக்கிறார்கள். இதனால் மனமுடைந்து அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதில் கொடுமை, பிரவீன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அதே கல்லூரியை சேர்ந்த டேனியல் வின்சென்ட் என்ற மாணவர் நாட்டு வெடித்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்து ஒரே கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்லூரிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இதே திருச்சியில் இனியானூரை சேர்ந்த டீக்கடை நடத்திவரும் பெரியசாமி என்பவரின் மகள் பதினோராம் வகுப்பு மாணவி தர்ஷனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு தயாராகிவந்த தர்ஷனா எதிர்பார்த்தபடி மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக இந்த துயர முடிவை எடுத்திருக்கிறார்.
*பெண் வழக்கறிஞரின் ஆபாச வீடியோ ! அதிரடி காட்டிய நீதிபதி !*
70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் தனது ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வீடியோக்களை நீக்குமாறு மத்திய அரசுக்கு முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றும் மேற்படி வீடியோவை நீக்க உத்தரவிட வேண்டுமென்றும் பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேசன், 48 மணிநேரத்தில் சம்பந்தபட்ட வீடியோவை நீக்க வேண்டுமென்று அதிரடி காட்டியிருக்கிறார். கல்லூரி பயின்றபோது காதல் ஏற்பட்டதையும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் ஆசை வார்த்தை கூறியதை நம்பி நெருக்கமாக பழகியதாகவும் அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை கேடான நோக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார், அந்த பெண் வழக்கறிஞர்.
தனது மகளாக நினைத்து இந்த வழக்கை அணுகுவதாக கண் கலங்கிய நீதிபதி, அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். ஒரு வழக்கறிஞர் என்பதால், தைரியமாக வழக்கு தொடுக்க முன்வந்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
*செல்போனில் ஆபாச இணையதளங்களை பெற்றோர்கள் தடுக்கும் வசதி வேண்டும் – பெற்றோர் கோரிக்கை*
பள்ளி மாணவர்களிடத்திலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், ஆபத்தான விளையாட்டுகள் மற்றும் ஆபாச இணையதளங்களை அவர்கள் அணுகாதவாறு, பெற்றோர்கள் தடுக்கும் வகையில் பேரண்டல் விண்டோ சாப்ட்வேர் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார், மதுரை கீழக்குயில்குடியை சேர்ந்த விஜயகுமார்.
*முக்கிய வங்கி அதிகாரிகளுடன் சைபர் கிரைம் போலீசார் நடத்திய ஆலோசணை கூட்டம்*
இந்தியாவின் 34 முன்னணி வங்கியின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள், தமிழக சைபர்கிரைம் போலீசார். சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள சைபர் கிரைம் போலீஸ் தலைமையகத்தில் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், வங்கிகளுடன் இணைந்து சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை தடுப்பது மற்றும் விசாரணையை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். 1930 என்ற உதவி எண் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானித்திருக்கிறார்கள்.
இதுபோன்ற, பல்வேறு நிகழ்வுகள் குறித்த அலசல்களுடன் இன்றைய (10-07-2025) அங்குசம் ஆடுகளம்.