அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இலஞ்சம் வாங்கிய திருச்சி வணிக EB ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

லஞ்சம் வாங்கிய திருச்சி வணிக மின் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை  !

திருச்சி, மணச்சநல்லூர் தாலுகா, சமயபுரம், தண்ணீர்பந்தலை சேர்ந்தவர்   சவரிமுத்து இவரின் மனைவி ரத்தினமேரி என்பவர் பெயரில் புதிதாக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய  சிவக்குமார், த/பெ பேயத்தேவர் வணிக மின் ஆய்வாளர், இளமின்பொறியாளர் அலுவலகம், சமயபுரம் என்பவர் ரூ.900/- லஞ்சம் கேட்டாதால், சவரிமுத்து கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் திரு.சிவக்குமார் என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு பிரிவு கு.எண்.15/2008, சட்டப்பிரிவு 7 ஊழல் தடுப்புச்சட்டம்-1988ன்படி கடந்த 05.06.2008ம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதனை தொடர்ந்து 06.06.2008 ந்தேதி மேற் கொண்ட பொறி, புகார்தாரர் சவரிமுத்து என்பவரிடம் சிவக்குமார் கையூட்டாக ரூ.900/-ஐ கேட்டு பெற்ற போது அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் சூரக்குமார் சிவக்குமாரை கைது செய்தனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த வழக்கு திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று (11.07.2023) திருச்சி ஊழல்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.கார்த்திகேயன் தன்னுடைய தீர்ப்பில் சிவக்குமார், த/பெ பேயத்தேவர், வணிக மின் ஆய்வாளர், இளமின் பொறியாளர், இயக்கலும் காத்தலும், சமயபுரம் என்பவர் லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-க்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.10,000/- அபராதமும், ஊழல் தடுப்பு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.10,000/- அபராதமும், மேற்படி அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கினை கோ.மணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, பிரசன்ன வெங்கடேஷ், காவல்எஆய்வாளர், மற்றும் பாஸ்கர், உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, திருச்சிராப்பள்ளி ஆகியோர்கள் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தும் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் ஆகியோர் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.