அங்குசம் சேனலில் இணைய

4% அகவிலைப்படி – உயர்வு தொடர்பாக அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு உண்மையா? ஓர் அரசு ஊழியரின் மனக்குமுறல்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

4% அகவிலைப்படி – உயர்வு தொடர்பாக அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு உண்மையா? ஓர் அரசு ஊழியரின் மனக்குமுறல்

ஒரு தவணை அகவிலைப்படி வழங்கியதால், அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு. (சராசரியாக 2300 கோடி.) கொரோனாவை காரணம் காட்டி, கடந்த ஆட்சியில் (2020) முடக்கப்பட்ட இருதவணைகள் ₹4600 கோடி அரசுக்கு லாபம். 2021இல் தேதிகள் கடந்த அறிவிப்பால் ₹4600 கோடி அரசுக்கு லாபம். 2022இல் இரு தவணைகள் முடக்கத்தால் ₹4600 கோடி அரசுக்கு லாபம். ஆக, அரசு ஊழியர், ஆசிரியர்களை வஞ்சித்து, அகவிலைப்படியில் மட்டும் அரசு தரமறுத்தது ₹13800 கோடி.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சரண் விடுப்பில், தோராயமாக ஒருவருக்கு ஆண்டுக்கு ₹15000/ என்றால், தோராயமாக 100,00,00 பேருக்கு ₹15,000கோடி. ஆக, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றி, அரசு பறித்தது ₹28800 கோடி. இதில், கொரோனாவுக்காக கடந்த ஆட்சியில் அரசு ஒதுக்கியது ₹5000கோடி. இந்த ஆட்சியில் ₹5000கோடியென வைத்துக்கொண்டால், மொத்தம் 10000கோடி. கொரோனாவை காரணம் காட்டி நமக்கு சேர வேண்டிய ₹28800கோடியை பறித்து, கொரோனாவுக்காக ₹10000கோடியை மட்டும் செலவழித்ததுபோக, நம்மிடமிருந்து ₹18800கோடியை அரசு சுருட்டியுள்ளது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இந்நிலையில், 02.01.2023 நேற்று அறிவித்த. 4% அகவிலைப்படி, ₹2359 கோடி அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையென ஒரு பச்சைப் பொய்யை முதல்வர் கூறியுள்ளது நியாயந்தானா? உண்மையில், அரசிடம் உள்ள நமது ₹18800 கோடியில் ₹2359 கோடி போக, ₹16441 கோடி நமது பணம் அரசிடம் உள்ளதென்பதுதான் உண்மை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது நாம் கொண்டு வந்த அரசு என்ற எண்ணம் நமக்கிருப்பதுபோல், இது அவர்கள் கொண்டு வந்த அரசு என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லாமல் இருப்பது அவருக்கே கேடாய் முடியலாம். சொந்த கோழி தோல் முடையிட்டால் அதன் நிலையென்னவாகும் என்பது அனைவரும் அறிந்ததே. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள், கண்களை விற்று சித்திரம் வாங்கக்கூடாது. இந்தக் கணக்கீட்டில் தமிழ்நாடு அரசின் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அடங்கவில்லை. அகவிலைப்படி என்பது சம்பள உயர்வு அல்ல. ஒவ்வொரு அரையாண்டு காலத்திலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு அந்த விலையேற்றத்திற்கேற்ப விழுக்காட்டின் அடிப்படையில் வழங்கப்படும் ஈடான தொகைதான் என்பதே உண்மை.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.