அங்குசம் பார்வையில் ‘418’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யெலமஞ்சிலி, டைரக்டர்: கிர்டன் நடகெளடா, ஆர்டிஸ்ட்: சைத்ரா ஆச்சர், ரமேஷ் இந்திரா, சரண் லக்கராஜு, பிரீத்தி பகடலா, சூர்ய ராஜ், ஸ்ரீவைஷ்ணவ், ஷஷாங் பாட்டீல், ஒளிப்பதிவு: தினேஷ் திவாகரன், இசை: வெங்கி ஜி.ஜி., ஆர்ட் டைரக்டர்: உல்லாஸ் ஹைதூர், பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

கர்நாடக மாநில கடலோரப் பகுதியில் இருக்கும் வேதகிரி என்ற ஊரில் மெடிக்கல் காலேஜ் ஒன்று உள்ளது. அங்கே இருக்கும் மாணவர்கள் விடுதியில் அறை எண் 418 எப்போதும் பூட்டியே இருக்கும். அதை யாரும் திறக்க முயற்சிக்கக் கூடாது என்பது வார்டனின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர். இதையும் மீறி சில மாணவர்கள் அந்த ரூம் பக்கம் போனாலே சில திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி என்ன தான் அந்த 418-ஆம் நம்பர் ரூமில் இருக்கு?

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

என்ன இருக்கும்? செத்துப் போன ஒரு இளம் பெண்ணுடைய ஆவி அங்க தான் சுத்திக்கிட்டிருக்கும்னு நீங்க நினைச்சீங்கன்னா, நீங்க தான் பேய்ப்படங்களின் பேய்த்தனமான ரசிகர்னு பட்டமே கொடுக்கலாம். அதான் படத்துலயும் இருக்கு.

‘418’“உளவியல் ரீதியாக இதில் திகில் காட்சிகள் இருக்கு. அதனால் இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்க்கும்படி நாங்கள் சிபாரி செய்யவில்லை” என படம் ஆரம்பிக்கும் முன்பு வார்னிங் கார்டு போடுகிறார்கள். அய்யய்யோ… படம் படுபயங்கரமா இருக்கும் போலயேன்னு நாமும் அதிகமாவே திகிலாகிட்டோம்.

ஆனா படம் ஆரம்பிச்ச்சு பத்தாவது நிமிஷத்துலேயே நமக்கு தூக்கம் வர ஆரம்பிச்சிருச்சு. இடைவேளை வரைக்கும் படத்துல வரவன் போறவன் எல்லாம் “அந்த ரூம்ல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? ஏன் நடந்துச்சுன்னு தெரியுமா?”ன்னு வில்லுப்பாட்டு பாடிக்கிட்டே இருக்காய்ங்க. அந்த லட்சணத்துல இருக்கு இந்த ‘418’ திகில் & பேய்ப்படம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘418’இப்ப ஸ்டூடண்ட் ஹாஸ்டலா இருக்கும் இந்த இடத்துல தான் மெண்டல் ஆஸ்பத்திரி இருந்துச்சு. அந்த ஆஸ்பத்திரியின் வார்டு நம்பர் 418-ல கர்ப்பிணியான சைத்ரா ஆச்சர் அட்மிட்டாகியிருந்தார். அவருக்கு திடீர்னு மனப்பிறழ்வு ஏற்பட்டு, அங்கிருக்கும் பத்துப் பதினஞ்சு நர்ஸ்கள், டாக்டர்களை குரல்வளையைக் கடிச்சுக் குளோஸ் பண்ணிட்டாரு. அதான் இப்ப அதே 418-ல நடக்குதுன்னு இடைவேளைக்குப் பிறகு கதைவிட ஆரம்பிக்கிறாய்ங்க. ஆஸ்பத்திரியில இருந்த அதே 418-ஐ ஏண்டா ஹாஸ்டலா மாறுன பிறகும் ரூம் நம்பரா வச்சீக. சரி வச்சுத் தொலைச்சுட்டீக, அந்த ரூமை சிமெண்ட் வச்சுக்கட்டி மூடிட்டா மேட்டர் ஓவர். அதைவிட்டுட்டு, அதுக்கு ஒரு பூட்டு, சாவின்னு ஏண்டா எங்களை சாகடிக்கிறீக? அது சரி, டைரக்டருக்கு பொழைப்பு ஓடவேணாமா?

ரெண்டு தமிழ்ப்படத்துல நடிச்சதால, இந்தப் படத்துல வர்ற நடிகர்-நடிகைகளில் சைத்ரா ஆச்சர் மட்டும் தான் நமக்கு தெரிஞ்சமுகம். மத்தபடி எல்லோருமே அன்னியம் தான்.

படமும்  தான்….

அங்குசம் பார்வையில் ‘418’    39/100

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.