டிசம்பர் 15-ல் ஷிவராஜ் குமாரின் ’45’ டிரைலர் ரிலீஸ்!
கன்னட சினிமாவின் மெகா ஸ்டார்களான டாக்டர் ஷிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் இணைந்து மிரட்டியிருக்கும் படம் ’45’. அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்தப் படம் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகிறது.
கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக ’45’ கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிசம்பர் 15-ஆம் தேதி டிரைலரில் முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது படக்குழு.
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோரின் புதுமையான லுக்குகளை மையப்படுத்திய அறிவிப்பு போஸ்டர் — படத்தின் மர்மத்தையும் ஆர்வத்தையும் பலமடங்கு கூட்டுகிறது.
*படக்குழு*
தயாரிப்பு: ‘சுரஜ் புரொடக்ஷன்’
திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி
கதை, இசை & இயக்கம்: அர்ஜுன் ஜன்யா
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே,
எடிட்டர்: கே.எம். பிரகாஷ்,
சண்டைப் பயிற்சி : டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா,
நடன இயக்குனர்: ஜானி பாஷா,
வசனம் : அனில் குமார்,
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.