இராமநாதபுரத்தில் ஐந்து ஓ.பி.எஸ். ! குரூப்ல டூப்பு ! களமிறக்கிய கறுப்பாடு யாரு ?

எல்லாமே, ஓ.பன்னீர்செல்வம் என்பது மட்டுமல்ல; ஓ.பி.எஸ். என்ற அடைமொழியையும் சேர்த்தே பதிவு செய்திருப்பதால் வாக்காளர்கள் குழம்பிப் போவது நிச்சயம்.

0

இராமநாதபுரத்தில் ஐந்து ஓ.பி.எஸ்.  ! குரூப்ல டூப்பு ! களமிறக்கிய கருப்பாடு யாரு ? ! 

பாஜகவோடு கூட்டணியில் தொடர்ந்தாலும், ”தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே நேரடியாக போட்டியிடுகிறேன்” என்ற சபதத்தோடு, சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரத்தில் களமிறங்குகிறார், ஓ.பன்னீர்செல்வம்.

2 dhanalakshmi joseph

அவர் களமிறங்கும் ராமநாதபுரத்தில், அவரது பெயரையே கொண்ட வேட்பாளர்கள் அடுத்தடுத்து நான்கு பேர், சுயேட்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று ஓ பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

1 மதுரை மாவட்டம் நிலையில், உசிலம்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த *ஒச்சப்பன் மகன்  பன்னிர்செல்வம். ( ஒபிஎஸ் )

4 bismi svs

2 ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம். ( ஒபிஎஸ் )

3 மதுரை வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம். ( ஒபிஎஸ் )

4 மதுரை சோலை அழகுபுரம், பகுதியைச் சேர்ந்த *ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம். ( ஒபிஎஸ் )

என அடுத்தடுத்து ஒ பன்னிர்செல்வம் ( ஒபிஎஸ் ) என குறிப்பிட்டு 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஒரே மாதிரி வேடமிட்டு நால்வரை நிறுத்தி வைத்து இதில் ஒருவர் ”டூப்” அவரை கண்டுபிடியுங்கள் என்பதாக சவால் வைத்திருப்பார்கள். நிறுத்தப்பட்டவர்கள் பாடகர் என்றால், பாடச் சொல்வார்கள். டான்சர் என்றால் ஆடச்சொல்வார்கள். அவர்கள் பாடுவதையும், ஆடுவதையும் வைத்து யார் டூப் என்று கண்டுபிடிக்க வேண்டும். எல்லாமே, ஓ.பன்னீர்செல்வம் என்பது மட்டுமல்ல; ஓ.பி.எஸ். என்ற அடைமொழியையும் சேர்த்தே பதிவு செய்திருப்பதால் வாக்காளர்கள் குழம்பிப் போவது நிச்சயம்.

இபிஎஸ், தரப்புதான் இதுபோன்ற ஈன செயலில் ஈடுபட்டு வருவதாக ஒரிஜினல் ஒ.பன்னிர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காமணி.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.