சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து 5 பெண்கள் உட்பட 7 பேர் உடல் சிதறி பலி ! தொடர்கதையாகிவரும் அவலம் !
பட்டாசு ஆலைகளில் பணியாற்றிவரும் சக தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ...
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து 5 பெண்கள் உட்பட 7 பேர் உடல் சிதறி பலி !
தொடர்கதையாகிவரும் அவலம் !
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் 50 அறைகள் கொண்ட ஸ்ரீ சுதர்சன் என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று சரியாக மூன்று மணி அளவில் தொழிலாளர்கள் பணியின் போது மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் அறையில் பற்றிய தீ அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பற்றி அறை முழுவதும் தரைமட்டமானது. இந்த விபத்தில் பணியில் 20-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உட்பட 7 பேர்பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரங்களில் விருதுநகர் மாவட்டத்தில் நான்குக்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு விபத்து ஏற்பட்டு அங்கே பணியாற்றிய தொழிலாளர்கள் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. இது பட்டாசு ஆலைகளில் பணியாற்றிவரும் சக தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறார்கள்.
மாரீஸ்வரன்.