இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழும் ! பங்குசந்தை சரிவு – வெளிநாட்டு நிறுவனங்கள் கணிப்பு!
இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழும் ! வெளிநாட்டு நிறுவனங்கள் கணிப்பு ! இந்தியாவில் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தினால் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழும் வாய்ப்பு உள்ளதாக உலக வர்த்தக நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனால் இந்திய பங்கு சந்தையில் இந்திய நிறுவனங்களின் பங்கு விற்பனை மிகவும் குறைந்துள்ளது. தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
காரணம் தற்போதைய பாஜக ஆட்சி போய் புதிய ஆட்சி வரும் என்று நம்புகின்றனர். புதிய ஆட்சி பங்கு சந்தை தொடர்பாக என்ன புதிய விதிகளை வகுக்கபோகின்றதோ? என்ற அச்சமும், வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரம் தெரிந்தபின்னர் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குசந்தையில் இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உள்ளன.
இதனால் சென்சஸ் நிப்டியில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களில் பங்கு விலைகள் கடுமையான சரிவைச் சந்தித்து இருக்கின்றன. நிப்டிப் பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 43 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து விற்பனையாக இருக்கிறது l&t பங்கு 5.6%, பாரத் பெட்ரோலியம் 4.5% என பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையான சரிவை இன்றைய தினம் (09.05.2024) சந்தித்து இருக்கிறது.
ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், எச்டிஎப்சி, ரிலையன்ஸ் விப்ரோ உள்ளிட்ட பங்குகளின் விலையும் தற்பொழுது குறைந்து விற்பனையாகி இருக்கின்றது. மக்களவைத் தேர்தலுக்குப் பின் அரசியல் மாற்றம் ஏற்படகூடும் என்று எதிர்பார்ப்பில் பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற நிலை இருப்பதாகவே பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மும்பை பங்கு சந்தை குறியீடு ஆயிரம் புள்ளிகளுக்குக் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி ஆளாக்கி இருக்கிறார்கள். தேசிய பங்கு சந்தை குறியீட்டு நிப்டி 345 புள்ளிகள் சரிந்து 21,947 புள்ளிகளானது. சென்சஸ் இறுதி நேர வர்த்தகத்தில் 1262 புள்ளிகள் குறைந்து 244 புள்ளிகளில் வர்த்தகம் ஆகியிருக்கின்றது என்றும் நிப்டியில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களில் பங்குகள் விலை குறைந்து விற்பனையாகின்றன நிப்டி பட்டியலை பொருத்தவரைக்கும் அங்கு 50 நிறுவனங்களில் 43 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து விற்பனையாக இருக்கின்றது.
குறிப்பாக L & T பங்கு 5.6% பாரத் பெட்ரோலியம் பங்கு நான்கு புள்ளி 5% என விற்பனையாக இருக்கிறது. டிவிஎஸ், லேப், ஸ்ரீராம் பைனான்ஸ் 3% விலை குறைந்து விற்பனையாக இருக்கின்றன. ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ் டாடா ஸ்டீல் எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் விக்ரம் உள்ளிட்ட பங்குகளின் விலை தற்பொழுது குறைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்திய பங்குகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழும் வாய்ப்புள்ளதாக நம்புகின்றன. இது உண்மையா என்பதை ஜூன் 4ஆம் நாள் தெரிந்துவிடும்.
-ஆதவன்