அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

10 ஆண்டுகால ஆட்சியில் 8000 கோடி..!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணன் கணபதி சேர்வை தெரு, பர்மா காலனி , வ.உ.சிதெரு, காந்திபுரம், லூர்துநகர் , மாதா கோவில் ஆகிய இடங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்‌. இந்த பிரச்சாரத்தில் பிஜேபியை சேர்ந்த தொகுதி பொறுப்பாளர் பகுதி கழக செயலாளர் வட்டசெயலாளர்கள் உட்பட பல பங்கேற்றனர்.

டாக்டர் பா.சரவணன் பேசியதாவது,

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

மதுரை மாவட்டத்தில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ௹8000 கோடி அளவில் வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். குறிப்பாக திமுகவில் சீரழிக்கப்பட்ட மதுரை மாநாட்சியை மேம்படுத்த  250 கோடி சிறப்பு நிதி, மதுரை மாவட்டத்தில் 12 அம்மா உணவகம்,1000 கோடியில் ஸ்மார்ட் திட்டம், 1000 கோடியில் பறக்கும் பாலம், 1292 கோடியில் குடிநீர் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 223 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு இதற்காக 21 கோடி செலவில் சுற்றுச்சுவர் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல வாடிப்பட்டி திருமங்கலம் வரை 493கோடி மதிப்பீட்டில் வெளிவட்ட சாலையும், அதேபோல திருமங்கலம் கொல்லம் நான்குவழி சாலை பணியும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக இந்த வடக்கு தொகுதி மட்டும் 37.25 கோடி மதிப்பீட்டில் உலகத் தமிழ் சங்கபெரும் திட்டவளாகம் , ஆறு கோடியில் செயற்கை இழை ஆக்கி மைதானம், மதுரை மாட்டுத்தாவணிஅருகே 9 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் , மதுரை மாட்டுத்தாவணி அருகே 12 கோடியில் பழ சந்தை, 30கோடியில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், மதுரை வடக்கு தொகுதியில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் 84கோடியில் தடுப்பணைகள், 150 கோடியில் அரசு ராஜாஜி மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 325 கோடி மதிப்பு உயர்ரக ஆபரேஷன் தியேட்டர் மற்றும் உபகரணங்கள்,

2026 June 11 - 17 Angusam Book

 10 ஆண்டுகால ஆட்சியில் 8000 கோடி..!
10 ஆண்டுகால ஆட்சியில் 8000 கோடி..!

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

23.17 கோடி மதிப்பில் குருவிக்காரன் சாலையில் பாலம், வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் 333கோடிமதிப்பில் சாலைகள், மூன்று மாவடி முதல் ஆணையூர் வரை 50கோடியில் சாலை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதேபோல கோரிப்பாளைத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு வரைபடம் தயாரிக்கப்பட்டு  5000கோடி அளவில் மதுரையில் திட்டங்கள் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகமும் உள்ளன. ஜல்லிக்கட்டு அரங்கமும் இதுதான் திமுக செய்தது. ஏற்கனவேஅதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டி திறந்துஅதற்கு ஸ்டிக்கர் போடுகிறார்கள். தற்போது பல்வேறு கோரிக்கைகளை அளித்துள்ளீர்கள் நிச்சயம் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். அப்போது வடக்கு தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக உருவாக்கி காட்டுவேன் என கூறினார்.

ஷாகுல், படங்கள் ; ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.