உட்கார்ந்து பாதி உசுரு போனது தான் மிச்சம். நல்ல வேளை ! ….. 80’S பில்டப் ‘ படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் 80’S பில்டப் ‘ எப்படி இருக்கு !
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, டைரக்டர்: எஸ்.கல்யாண், ஆர்ட்டிஸ்ட்ஸ்: சந்தானம், ராதிகா ப்ரீத்தி, சங்கீதா, ஆர்.சுந்தர்ராஜன், கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், மனோபாலா, மயில்சாமி. இசை: ஜிப்ரான், ஒளிப்பதிவு: ஜேக்கப் ரத்னராஜ், எடிட்டிங்: எம்.எஸ்.பாரதி. பிஆர்ஓ: சதிஷ் குமார்.
படத்தின் கதையைப் பற்றியோ, திரைக்கதையைப் பற்றியோ, நல்ல சீன்களைப் பற்றியோ, வசனத்தைப் பற்றியோ, நல்ல பாடல்களைப் பற்றியோ டைரக்டர் கல்யாணும் படத்தை பணம் கொடுத்து வாங்கிய ஞானவேல்ராஜாவும் கவலைப்படாத போது, அதைப் பற்றி நாம எழுதி வெப் ஸ்பேஸை ஏன் வீணடிக்க வேண்டும்?
இரண்டேகால் மணி நேர படமும் சாவு வீட்டில் நடப்பதால் ஒட்டு மொத்த படமும் செத்த மாட்டுத்தனமாத் தான் இருக்கு. படம் முழுக்க சந்தானம் முகத்தில் ‘சவ’ க்களை. சாரி மிஸ்டர் சந்தானம், இதற்கு மேல் விமர்சித்து உங்கள் மீது சேற்றை வாரி இறைக்க விரும்பவில்லை.
ஹலோ டைரக்டர் கல்யாண் பிரதர், நீங்க நல்ல சினிமாவெல்லாம் பார்க்குறதில்ல போல. இரண்டேகால் மணி நேரத்துல, ஏதாவது ரெண்டு சீன்லயாவது சிரிச்சுப்புடலாம்னு உட்கார்ந்து பாதி உசுரு போனது தான் மிச்சம். நல்ல வேளை இத்தோடயாவது விட்டாய்ங்களே…. –
– மதுரை மாறன்