அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

’99/66’ பட டிரெய்லர் விழாவா? ரக்சிதா மகாலட்சுமியின் ரசிகர் மன்ற விழாவா?

திருச்சியில் அடகு நகையை விற்க

மித்ரா பிக்சர்ஸ் [பி] லிமிடெட்’  பேனரில் எம்.எஸ்.மூர்த்தி கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதி டைரக்ட் பண்ணி, முக்கிய கேரக்டரிலும் நடித்து விரைவில் ரிலீசாகப் போகும் படம் ‘99/66’. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 2026 ஜனவரி-03—ஆம் தேதி இரவு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள எழில்மிகு அரங்கத்தில் நடந்தது. மூர்த்தியின் உறவினர்கள், ஆதரவாளர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. அரங்கிற்கு வெளியே பாடல் காட்சிகளில் வரும் கருப்பர் சாமி, பிள்ளையார், புத்தர் ஆகியோர் இருக்கும் செட் போட்டு அசத்தியிருந்தார் மூர்த்தி.

பிரபல கட்டுமான நிறுவனத்தின் ஓனரான மூர்த்தி, ரிலீசாகவிருக்கும் ‘99/66’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுடன் தயாரிப்பில் இருக்கும் ‘ஹஸ்கி ஹவுஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கையும் அதே அரங்கில்  சிறப்பு விருந்தினர்களான கலைப்புலி தாணு, டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மோகன் ஜி, அகத்தியன்,  பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் ஆகியோரை வைத்து வெளியிட்டார். விழாவில் பேசியோர்….

2026 January 1- 7 ANGUSAM Book அங்குசம் வார இதழ்

’99/66’ பட விழா

கலைப்புலி தாணு,

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

“நான் முதன்முதலில் திகில் படம் தான் தயாரித்தேன். தம்பி மூர்த்தியும் அதைத் தான் செய்துள்ளார். எல்லாவற்றிலும் வியாபார சிந்தனையுடன் இருக்கும் ஒருவரால் தான் இவ்வளவு பிரம்மாண்டமாக டிரெய்லர் ரிலீஸ் விழாவை நடத்த முடியும்”.

ஆர்.வி.உதயகுமார்,

“இந்தப் படத்தில் வெயிட்டான கேரக்டரில் நடித்திருக்கும் நம்ம ரக்சிதா மகாலட்சுமியின் தீவிர ரசிகன் நான்.  ரீல்ஸ்கள் போட்டு கதிகலக்கி வருகிறார். இப்படத்தில் நடிப்பிலும் கலக்கியிருப்பார்னு நம்புறேன்”.

கு.ஞானசம்பந்தம்,

“அழைப்பிதழிலிருந்து இங்கு நடக்கும் எல்லாமே பிரம்மாண்டமா இருக்கு. நானும் ரக்சிதாவின் ரசிகன் தான்”.

’99/66’ பட விழாபேரரசு,

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“ஆர்.வி.உதயகுமார் இயக்குனர்கள் சங்கத் தலைவரா? இல்ல ரக்சிதாவின் ரசிகர் மன்றத் தலைவரான்னு தெரியல. அந்தளவுக்கு வெறித்தனமான ரக்சிதாவின் ரசிகரா இருக்கார். இது பேய்ப்படம்னு நினைச்சா…பாட்டெல்லாம் பிள்ளையார், கருப்பணசாமி, புத்தர்னு வேற லெவல் எனெர்ஜியா இருக்கு. மூர்த்தியின் தன்னம்பிக்கைக்கும் கடின உழைப்புக்கும் வாழ்த்துக்கள்”.

மோகன் ஜி,

“இந்தப் படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என்னோட ‘திரெளபதி—2’ வேலைகள் பிஸியாக நடந்தாலும் பி.ஆர்.ஓ.புவனின் அன்புக்கு கட்டுப்பட்டு இங்கு வந்தேன். அரங்கம் முழுவதும் பாஸிட்டிவ் எனெர்ஜி பரவக்காரணம் மூர்த்தி தான்”.

’99/66’ பட விழாரக்‌ஷிதா மகாலட்சுமி,

“மீடியாக்களின் ஆதரவு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. பேசிய எல்லோருமே என்னோட ரசிகர் மன்றத் தலைவர்கள் எனச் சொன்னது அதைவிட பெரிய மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மூர்த்தி சார், தாராள மனசுக்காரர்”.

 எம்.எஸ்.மூர்த்தி,

“நான் சினிமாவுக்கு புதியவன். எனக்குத் தெரிந்ததை வைத்து மிக எளிமையாக இந்தப் படத்தை எடுத்துள்ளேன். படத்திற்கு பத்திரிகையாளர்களின் பேராதரவு தேவை”.

தாய்லாந்து, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள  புத்த விஹார்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. ரக்சிதா மகாலட்சுமியுடன் சபரி, ரோஹித், கே.ஆர்.விஜயா, ஸ்வேதா, பி.எல்.தேனப்பன், குமாரி கனிஷ்கா, சிங்கம்புலி, சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

‘99/66’-ன் ஒளிப்பதிவு : சேவிலோ ராஜா, எடிட்டிங் : மீனாட்சி சுந்தரம், ஸ்டண்ட் : ஃபயர் கார்த்திக், டான்ஸ்: ஸ்ரீதர், ஆனந்த், பி.ஆர்.ஓ : புவன் செல்வராஜ்.

—    ஆண்டவர்

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.