ஒருவாரம் கழிச்சு எல்லாம் பழையபடி மாறிடும்.
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டம்தான். ஏதோ புதுசா சட்டம் போட்டதுபோல பிளாஸ் நியூஸ் போடுறானுங்க. அமெரிக்காவில் நான் மது,சிகரெட் வாங்க போகும்போதெல்லாம் பாஸ்போர்ட்டை தூக்கிட்டு போகணும். அங்க பதினைந்து வயது பையன் கூட எருமைமாடுபோல இருப்பான். அவங்க சாப்பிடுற புரோட்டீன் அப்படி. நாம நாற்பது வயசுலேயும் அவங்க சைஸ்தான் இருப்போம். அதனால் நம்ம வயசை நம்பமாட்டாங்க. ஐடி கார்டை காட்டினால் மட்டும்தான் மது வாங்கமுடியும். அந்தளவு கறாரா கடைகள் இருக்கும்.
ஆனால் இந்தியாவில் புதுசா எந்த சட்டமும் தேவை இல்லை. இங்க ஏற்கனவே எல்லா சட்டங்களும் இருக்கு. விதிமீறல்களும் இருக்கும். இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எல்லாத்தையும் ஒரேநாளில் சரி செஞ்சுட முடியாது. படிப்படியாகவே சமூக மாற்றங்கள் நடக்கும். திரைப்படங்களில் குடித்துவிட்டு குத்து டான்ஸ் போடுறவங்களை பார்க்கும் பள்ளிச்சிறுவர்கள் யாரை ரோல்மாடலாக எடுத்துக்குவாங்க?
புதுசா ஊருக்குள் ஒரு எஸ்.ஐ வருவார். அவர் புது எஸ்.ஐ என்று பந்தா காட்ட முதலில் பஜாருக்கு போவார். பிளாட்பாரத்தில் இருக்கும் கடைகளை அடிப்பார். சமூக விரோதிகள் சிலரை அரெஸ்ட் செய்வார். இரண்டு நாட்கள் ஊருக்குள் பந்தா காட்டுவார். ஒருவாரம் ஊரே அந்த எஸ்.ஐ பற்றி பேசுவாங்க. ஒருவாரம் கழிச்சு எல்லாம் பழையபடி மாறிடும்.
விநாயக முருகன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.